/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., - எம்.எல்.சி.,யை கொல்ல முயற்சி கைகோர்த்த துமகூரு ரவுடிகள்
/
காங்., - எம்.எல்.சி.,யை கொல்ல முயற்சி கைகோர்த்த துமகூரு ரவுடிகள்
காங்., - எம்.எல்.சி.,யை கொல்ல முயற்சி கைகோர்த்த துமகூரு ரவுடிகள்
காங்., - எம்.எல்.சி.,யை கொல்ல முயற்சி கைகோர்த்த துமகூரு ரவுடிகள்
ADDED : ஏப் 02, 2025 06:34 AM

துமகூரு : கர்நாடக கூட்டுறவு அமைச்சர் ராஜண்ணா மகன் ராஜேந்திரா. காங்கிரஸ் எம்.எல்.சி.,யான இவரை கொல்ல ஒரு கும்பல் முயற்சி செய்தது பற்றி, கியாதசந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப் பதிவாகி உள்ளது. மதுகிரி டி.எஸ்.பி., மஞ்சுநாத் தலைமையில் விசாரணை நடக்கிறது.
சத்தியம்
ராஜேந்திராவை கொலை செய்ய, துமகூரை சேர்ந்த பிரபல ரவுடி சோமா தலைமையில், கூலிப்படை அமைக்கப்பட்டதும், கொலைக்கு 70 லட்சம் ரூபாய் பேரம் பேசி, முதற்கட்டமாக 5 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.ராஜேந்திராவை கொல்ல முயற்சி நடப்பது பற்றி, ஆடியோ ஒன்று வெளியாகி இருந்தது. அந்த ஆடியோவில் பேசிய புஷ்பா என்ற பேபி புஷ்பா, ராக்கி என்பவரிடம், 'எம்.எல்.சி., ராஜேந்திராவை கொலை செய்ய, சோமா 70 லட்சம் ரூபாய் 'டீல்' பேசி உள்ளார்.
அவருக்கு 5 லட்சம் ரூபாய் வந்து உள்ளது. இது எனது அம்மா மீது சத்தியம்' என்று கூறி உள்ளார்.
இதையடுத்து புஷ்பா உட்பட மூன்று பேரை, நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். புஷ்பாவிடம் நடத்திய விசாரணையில், எம்.எல்.சி.,யை கொலை செய்ய உள்ள தகவல் பற்றி, யசோதா என்பவர் புஷ்பாவிடம் கூறியது தெரிந்தது. யசோதாவும் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
புஷ்பா, ரவுடி சோமாவின் ஆதரவாளராக இருந்து உள்ளார். மதுகிரி உப்பாரஹள்ளியில் ஹோட்டல் நடத்துகிறார்.
வீடியோ
ஹனி டிராப் செய்வதிலும் கில்லாடியாக இருந்து உள்ளார். இவரது ஆபாச வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது மீண்டும் அந்த வீடியோக்கள் உலா வர துவங்கி உள்ளன.
சோமா, புஷ்பாவிடம் இருந்து 30 லட்சம் ரூபாய் வாங்கி உள்ளார். பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதால், சோமா மீதான கோபத்தில் எம்.எல்.சி.,யை கொலை செய்ய, டீல் நடந்தது பற்றி ராக்கியிடம் கூறியது தெரிய வந்துள்ளது.
ராஜேந்திராவை கொலை செய்ய, துமகூரு மாவட்ட முக்கிய ரவுடிகள் அனைவரும் ஒன்றுகூடி, பிளான் போட்டு உள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதமே ராஜேந்திராவை கொல்ல முயற்சித்து உள்ளனர். ஆனால் அவர் தப்பித்து விட்டார்.
இதனால் கடந்த ஜனவரியில் மீண்டும் 'ஸ்கெட்ச்' போட்டதும் தெரியவந்து உள்ளது. தலைமறைவாக உள்ள சோமா உள்ளிட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

