தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காங்., வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு; ம.பி.,யில் பரபரப்பு

 காங்., வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு; ம.பி.,யில் பரபரப்பு

 காங்., வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிப்பு; ம.பி.,யில் பரபரப்பு


ADDED : ஜூன் 10, 2026 04:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 10, 2026 04:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போபால்: மத்திய பிரதேசத்தில், ராஜ்யசபா தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு ஆளும் பா.ஜ., திடீரென வேட்பாளரை நிறுத்திய நிலையில், அந்த இடத்துக்கு போட்டியிட்ட காங்., - வேட்பாளரும், முன்னாள் எம்.பி.,யுமான மீனாட்சி நடராஜனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகம், கர்நாடகா, ம.பி., உட்பட நாடு முழுதும் காலியாக உள்ள, 26 ராஜ்யசபா இடங்களுக்கு, வரும் 18ல் தேர்தல் நடக்கிறது. முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கும் ம.பி.,யில், மூன்று ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.

மொத்தம், 230 எம்.எல்.ஏ.,க்களை உடைய ம.பி., சட்டசபையில், ஒரு எம்.பி.,யை தேர்ந்தெடுக்க, 58 எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் தேவை. ஆளும் பா.ஜ.,வுக்கு, 164 எம்.எல்.ஏ.,க்கள் இருப்பதால், இரண்டு ராஜ்யசபா இடங்களை வெல்வது உறுதி. தருண் சுக், ரஜ்னீஷ் அகர்வால் ஆகியோரை அக்கட்சி வேட்பாளர்களாக அறிவித்துள்ளது.

எதிர்க்கட்சியான காங்கிரசுக்கு, 64 எம்.எல்.ஏ.,க்கள் உள்ள நிலையில், ஒரு ராஜ்யசபா இடம் கிடைக்கும். அந்த வகையில், முன்னாள் எம்.பி., மீனாட்சி நடராஜனை அக்கட்சி வேட்பாளராக களமிறக்கியது.

இதற்கிடையே, ம.பி., மீனவர் நல வாரிய தலைவர் மகேஷ் கெவத்தை, மூன்றாவது இடத்திற்கு பா.ஜ., திடீரென நிறுத்தி உள்ளது. இவர் வெற்றி பெற, பா.ஜ.,வுக்கு கூடுதலாக எட்டு எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகள் மட்டுமே தேவை.

இந்நிலையில், குதிரை பேரத்தை தடுக்கவும், கட்சி மாறி ஓட்டளிப்பதை தடுக்கவும், காங்., ஆளும் கர்நாடகாவின் பெங்களூரில் உள்ள தனியார் ரிசார்ட்டில், ம.பி., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் நாளான வரும் 18ல், ம.பி.,க்கு வந்து அவர்கள் ஓட்டளிக்க உள்ளனர்.

இதற்கிடையே, காங்., வேட்பாளர் மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நேற்று நிராகரித்தார்.

தெலுங்கானாவில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை அவர் மறைத்ததாக, பா.ஜ., வேட்பாளர் மகேஷ் கெவத் அளித்த புகாரின்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மீனாட்சி நடராஜன் முடிவு செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us