/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கட்சி மாறி ஓட்டு போட்ட காங்., கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்
/
கட்சி மாறி ஓட்டு போட்ட காங்., கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்
கட்சி மாறி ஓட்டு போட்ட காங்., கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்
கட்சி மாறி ஓட்டு போட்ட காங்., கவுன்சிலர்கள் தகுதி நீக்கம்
ADDED : மார் 27, 2025 05:33 AM
சிக்கபல்லாபூர்: சிக்கபல்லாபூர் நகராட்சியில் தலைவர், துணை தலைவர் தேர்தலில், கட்சி மாறி ஓட்டுப் போட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஆறு பேரை தகுதி நீக்கம் செய்து, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது.
சிக்கபல்லாபூர் நகராட்சி தலைவர், துணை தலைவர் பதவிக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி தேர்தல் நடந்தது. யாருடைய ஆதரவாளர் வெற்றி பெறுவது என்பதில், சிக்கபல்லாபூர் பா.ஜ., - எம்.பி., சுதாகர், காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் இடையே கடும் போட்டி நிலவியது.
நகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர்கள் அனைவரும், கட்சி சார்பில் நிறுத்தப்பட்டு உள்ள தலைவர், துணை தலைவரை தேர்ந்தெடுக்க ஓட்டுப் போட வேண்டுமென கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் காங்கிரஸ் கவுன்சிலர்களான 2வது வார்டின் ரத்னம்மா; 22வது வார்டின் ஸ்வாதி மஞ்சுநாத்; 24வது வார்டின் அம்பிகா; 27வது வார்டின் நேத்ராவதி; 7வது வார்டின் சதீஷ்; 13வது வார்டின் நிர்மலா ஆகியோர் கொறடா உத்தரவை மீறி, கட்சி மாறி ஓட்டுப் போட்டனர். இதனால் தலைவர், துணை தலைவர் பதவியை பா.ஜ., கைப்பற்றியது.
'கொறடா உத்தரவை மீறிய ஆறு கவுன்சிலர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, சிக்கபல்லாபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
மனுவை நீதிபதி பிரேம்குமார் விசாரித்து வந்தார். வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறு கவுன்சிலர்களையும் தகுதி நீக்கம் செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஆறு பேரும் தயாராகி வருகின்றனர்.