தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேல்சபை தலைவரை மாற்ற காங்கிரஸ் அரசு ஆலோசனை பசவராஜ் ஹொரட்டி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

 மேல்சபை தலைவரை மாற்ற காங்கிரஸ் அரசு ஆலோசனை பசவராஜ் ஹொரட்டி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?

 மேல்சபை தலைவரை மாற்ற காங்கிரஸ் அரசு ஆலோசனை பசவராஜ் ஹொரட்டி மீது நம்பிக்கையில்லா தீர்மானம்?


ADDED : ஜூலை 31, 2026 12:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2026 12:51 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடக சட்டசபை மழைக்கால கூட்டத்தொடருக்கு முன்பே, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டியை மாற்ற, காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. 'அரசு கூறினால், அடுத்த நொடியே ராஜினாமா செய்ய தயார்' என, ஹொரட்டி கூறியுள்ளார்.

சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் ஆகஸ்ட் 13ம் தேதி முதல், 27ம் தேதி வரை நடத்த, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடக மேல்சபையில் பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இருந்தது.

அக்கட்சியைச் சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி தலைவராக பதவி வகிக்கிறார். இப்போது சூழ்நிலை மாறியுள்ளது. மேல்சபையில் பா.ஜ.,வின் பலம் குறைந்து, காங்கிரஸ் பெரும்பான்மை பெற்றுள்ளது. எனவே, தங்கள் கட்சியை சேர்ந்தவர் தலைவராக இருக்க வேண்டும் என்பது, காங்கிரசாரின் எண்ணமாகும்.

இதனால், இம்முறை மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அவரை பதவியில் இருந்து நீக்க முயற்சிக்கின்றனர்.

ஹொரட்டி மறுப்பு காங்., - எம்.எல்.சி.,க்களின் நெருக்கடிக்கு பணிந்த, முதல்வர் சிவகுமார், சட்டசபை கூட்டம் துவங்குவதற்கு முன், மேல்சபை தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்படி, பசவராஜ் ஹொரட்டியிடம் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால், ஹொரட்டி மறுத்துள்ளார்.

இதுகுறித்து, நேற்று அவர் அளித்த பேட்டி:

எந்த கட்சியினராக இருந்தாலும், அரசியல் அமைப்பின்படி நடந்து கொள்ள வேண்டும். நான் இந்தியாவிலேயே மூத்த மேல்சபையின் தலைவர். எனக்கு 48 ஆண்டுகள் நீண்ட அனுபவம் உள்ளது. என்னை காங்கிரஸ் அரசு, மேல்சபை தலைவர் பதவியில் மாற்ற விரும்பினால் மாற்றட்டும்.

எனக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, காரணம் வேண்டாமா. அரசியல் அமைப்பின் கீழ், பதவியில் இருப்பவர்கள் மீது, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, அவர்கள் ஊழல் செய்திருக்க வேண்டும் அல்லது கட்சி பாகுபாடு பார்த்து செயல்பட்டிருக்க வேண்டும்.

இந்த இரண்டு குற்றச்சாட்டுகளும் என் மீது இல்லை. அவர்கள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, என்ன காரணத்தை கூறுவர்?

மேல்சபை தலைவர் பதவியை, ராஜினாமா செய்யும்படி, முதல்வர் என்னிடம் கூறவில்லை. அது வெறும் வதந்தி. கேட்டால் அடுத்த நொடியே, நான் ராஜினாமா செய்வேன். உடல் நலம் பாதிக்கப்பட்டு, நான் மருத்துவமனையில் இருந்தேன். அப்போது என்னை நலம் விசாரிக்க, முதல்வர் சிவகுமார் எனக்கு போன் செய்தார். ஆனால் அவர் ராஜினாமா குறித்து பேசவில்லை.

பதவி காலம் நான் என்றுமே பதவியில் ஒட்டிக்கொண்டு அமர்ந்திருந்தது இல்லை. 1956 முதல் இதுவரை, மேல்சபை தலைவராக இருந்தவர்கள் பதவி காலத்தை நிறைவு செய்துள்ளனர். அரசு மாறினாலும், மேல்சபை தலைவரை மாற்றியது இல்லை. பெரும்பான்மை வந்த போதும், மாற்றியது இல்லை. வரும் 2028ன் ஜூலை வரை, என் பதவிகாலம் உள்ளது.

இதுவரை மேல்சபை தலைவருக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த உதாரணங்கள் இல்லை. இதற்கு முன் மேல்சபை தலைவராக, பலரும் தயங்கினர். இப்போது இந்த பதவி மீது, அனைவருக்கும் இந்த அளவுக்கு பற்று ஏற்பட்டது ஏன் என, தெரியவில்லை.

காங்கிரசின் இரண்டு எம்.எல்.சி.,க்கள், மேல்சபை தலைவர் பதவி மீது கண் வைத்துள்ளனர். அவர்களே வதந்தியை பரப்புகின்றனர். இதற்காக தனக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்துவதாக, முதல்வர் கூறினார்.

நோட்டீஸ் பெற்று, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் வரை, நான் காத்திருக்க மாட்டேன். மேல்சபை தலைவரை பதவியில் இருந்து, கீழே இறக்க சரியான காரணம் இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேல்சபை தலைவருக்கு எதிராக, யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது இல்லை என, மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி கூறியது உண்மையல்ல. கடந்த 2015ல் அன்றைய மேல்சபை தலைவர் சங்கரமூர்த்திக்கு எதிராக, நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பா.ஜ., சார்பில் தேர்வு செய்யப்பட்ட பசவராஜ் ஹொரட்டிக்கு, பெரும்பான்மை இல்லையென்றால், அவர் ராஜினாமா செய்வது நல்லது. பா.ஜ., தேர்வு செய்தவரை, எங்களால் ஒப்புக்கொள்ள முடியாது. - நாகராஜ் யாதவ், எம்.எல்.சி., காங்கிரஸ்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us