தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஹிரியூரில் காங்கிரஸ் தோல்வி உறுதி: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு

ஹிரியூரில் காங்கிரஸ் தோல்வி உறுதி: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு

ஹிரியூரில் காங்கிரஸ் தோல்வி உறுதி: பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கணிப்பு


UPDATED : நவ 23, 2026 12:00 AM

ADDED : நவ 22, 2026 08:12 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 12:00 AM ADDED : நவ 22, 2026 08:12 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: ‘‘ஹிரியூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் தோல்வி உறுதி,’’ என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறினார்.

ஷிவமொக்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:

காடுகொல்லா சமூகம் மீது முதல்வர் சிவகுமாருக்கு திடீர் அக்கறை வந்துள்ளது. ஹிரியூர் தொகுதியில் வெற்றி பெற காடுகொல்லா சமூகத்தை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளார்.

எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரசுக்கு பாடம் புகட்டப்பட்டது. அதுபோல, ஹிரியூர் இடைத்தேர்தலிலும் அத்தொகுதி மக்கள் பாடம் புகட்டுவர். அங்கு காங்கிரஸ் தோல்வி உறுதி.

மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்காமல், முதல்வர் தன் விருப்பப்படி பல கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை அறிவிக்கிறார்.

கடந்த மூன்றரை ஆண்டுகளாக மாநிலம் முழுதும் உள்ள சாலை பள்ளங்கள் மூடப்படவில்லை. இப்போது சாலை பணிக்காக 16,000 கோடி ரூபாய் அறிவித்துள்ளனர். எம்.எல்.ஏ., தொகுதிகளுக்கு வளர்ச்சி பணி செய்ய நிதி இல்லை.

விவசாயிகளை பற்றி கவலையில்லாமல், அமைச்சர் பதவி எதிர்பார்த்தவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கி, முதல்வர் கவுரவிக்கிறார்.

ஆஷா ஊழியர்கள் தொடர்ந்து போராடுகின்றனர். அவர்களுக்கு வழங்க வேண்டிய, 350 கோடி ரூபாயை, அரசு கொடுக்க வேண்டும். தன்னை சாதாரண அரசு ஊழியர் என்று கூறும் சிவகுமார், தனது அரசு இல்லத்தை, 100 கோடி ரூபாய் செலவு செய்து புனரமைத்துள்ளார். மாநிலத்தில் வறட்சி நிலவும் போது இந்த ஆடம்பரம் தேவையா...

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us