/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சர் பதவி கேட்டு காங்., - எம்.எல்.ஏ., அடம்
/
அமைச்சர் பதவி கேட்டு காங்., - எம்.எல்.ஏ., அடம்
ADDED : நவ 12, 2025 07:16 AM

விஜயபுரா: ''எனக்கு கண்டிப்பாக அமைச்சர் பதவி வேண்டும்,'' என, முத்தேபிஹால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., நாடகவுடா அடம் பிடிக்க ஆரம்பித்து உள்ளார்.
முத்தேபிஹாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
அமைச்சரவை மாற்றத்தின்போது, லிங்காயத் ரெட்டி இடஒதுக்கீட்டின் அடிப்படையில், எனக்கு கண்டிப்பாக, அமைச்சர் பதவி வழங்க வேண்டும். எனக்கு 45 ஆண்டுகால அரசியல் அனுபவம் உள்ளது. விஜயபுரா மாவட்டத்தில் மூத்த எம்.எல்.ஏ.,வாக உள்ளேன்.
தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் மேலிட தலைவர்களும், முதல்வரும் எனக்கு அமைச்சர் பதவி வழங்குவதாக உறுதி அளித்தனர். அவர்கள் சொன்னபடி நடந்து கொள்ளவில்லை. இம்முறை எனக்கு அமைச்சர் பதவி வழங்கியே ஆக வேண்டும்.
இல்லாவிட்டால் என் தொகுதி மக்கள், காங்கிரஸ் மீதான நம்பிக்கையை இழந்துவிடுவர். பதவி கிடைக்காவிட்டால் எனக்கு பிரச்னை இல்லை. கட்சிக்கு தான் ஆபத்து.
முத்தேபிஹாலில் நீர்ப்பாசனம் உட்பட நிறைய மேம்பாட்டுப் பணிகள் நிலுவையில் உள்ளன. எம்.எல்.ஏ.,வாக இருந்து என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. தொகுதியை மேம்படுத்த நான் அமைச்சராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் அரசின் ஐந்து வாக்குறுதிகளும் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதை பார்த்து, பா.ஜ.,வினருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது. பொய் தகவல் கூறி மக்களை திசை திருப்பப் பார்க்கின்றனர். அவர்கள் ஆட்சிக் காலத்தில் வாங்கிய கடனை, நாங்கள் அடைக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

