sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மடாதிபதியை விமர்சித்த காங்., - எம்.எல்.ஏ., ; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார் 

 மடாதிபதியை விமர்சித்த காங்., - எம்.எல்.ஏ., ; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார் 

 மடாதிபதியை விமர்சித்த காங்., - எம்.எல்.ஏ., ; எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கோரினார் 


ADDED : மார் 16, 2026 07:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 07:08 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மாண்டியா: மடாதிபதி நிர்மலானந்தநாதசாமி வழிதவறி செல்வதாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா விமர்சனம் செய்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டு உள்ளார்.

மாண்டியாவின் ஸ்ரீரங்கப்பட்டணாவில், ஆதிசுஞ்சனகிரி மடத்தின் பள்ளி வளாகத்தில், நேற்று முன்தினம் விநாயகர் கோவில் திறக்கப்பட்டது.

மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, ஆதிசுஞ்சனகிரி மடத்தின் மடாதிபதி நிர்மலானந்தநாத சாமி, ஸ்ரீரங்கப்பட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ரமேஷ் பண்டிசித்தே கவுடா பேசுகையில், ''ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு உலகம் முழுதும் நற்பெயர் உள்ளது. மறைந்த மடாதிபதி பாலகங்காதரநாத சாமி அனைவரையும் ஒருங்கிணைத்து நல்ல பாதையை காட்டினார்.

''ஆனால் தற்போதைய மடாதிபதி நிர்மலானந்தநாத சுவாமியின் நடவடிக்கைகள் என்னை வருத்தப்பட வைத்து உள்ளது. அவர் ஒரு தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வழிதவறி சென்றது போன்று உணருகிறேன். மடம் மதச்சார்பற்ற முறையை கடைப்பிடிக்கிறது. மடாதிபதி அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும்,'' என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் குமாரசாமி பேசுகையில், ''மடாதிபதி வழிதவறி செல்கிறார் என்று பொது இடத்தில் சொல்வது சரியா. அவரை கேள்வி கேட்கும் நிலைக்கு நீங்கள் எல்லாம் வளர்ந்து விட்டீர்களா. ஒரு முறை மடாதிபதி, ஒக்கலிக சமூகத்திற்கு முதல்வராகும் வாய்ப்பு உள்ளது என்று பேசினார்.

''இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன். பின், மன்னிப்பும் கேட்டேன். மற்ற மடாதிபதிகள், நமது மடாதிபதியை பற்றி தவறாக பேசி விட கூடாது. அவரை நோக்கி விரல் நீட்ட கூடாது என்பதில் உறுதியாக உள்ளேன்,'' என்றார்.

மடாபதியை விமர்சித்ததால், ஒக்கலிக சமூகத்தினர் ரமேஷ் பண்டிசித்தே கவுடாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அவர் தான் பேசியதற்காக நேற்று மன்னிப்பு கோரினார். இத்துடன் இப்பிரச்னையை முடித்து கொள்ளலாம் என்றும் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us