/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அப்பாஜி நாடகவுடாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரசில் எதிர்ப்பு
/
அப்பாஜி நாடகவுடாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரசில் எதிர்ப்பு
அப்பாஜி நாடகவுடாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரசில் எதிர்ப்பு
அப்பாஜி நாடகவுடாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க காங்கிரசில் எதிர்ப்பு
ADDED : அக் 29, 2025 07:33 AM

விஜயபுரா: முத்தேபிஹால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பாஜி நாடகவுடாவுக்கு அமைச்சர் பதவி கொடுக்க, காங்கிரசில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
விஜயபுராவின் இண்டி காங்கிரஸ் எம்.எல்.ஏ., யஷ்வந்த்ராய கவுடா பாட்டீல், 57, நேற்று அளித்த பேட்டி:
முத்தேபிஹால் காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பாஜி நாடகவுடா, இதற்கு முன்பு இரண்டு முறை அமைச்சராக இருந்துள்ளார். தற்போது வாரிய தலைவராக உள்ளார். மீண்டும் அவர் அமைச்சர் பதவி கேட்பது சரியல்ல. இண்டி தொகுதியில் வெற்றி பெற்ற யாரும், இதுவரை அமைச்சராக இருந்தது இல்லை. இம்முறை எனக்கு அமைச்சர் பதவி வேண்டும்.
நான் 40 ஆண்டுகளாக கட்சியில் உள்ளேன். வேறு கட்சியில் இருந்து வரவில்லை. சமீபத்தில் முதல்வர் சித்தராமையா இண்டிக்கு வந்தபோது, எனக்கு அமைச்சர் பதவி வழங்கக் கோரி ஆதரவாளர்கள், தொகுதி மக்கள் கோஷம் போட்டனர்.
கட்சிக்குள் எந்த குழப்பமும் ஏற்பட கூடாது என்பதால், ஆதரவாளர்கள், மக்களை சமாதானப்படுத்தினேன். ஐந்து வாக்குறுதி திட்டங்களால் மக்கள் பயனடைகின்றனர். ஆனால் மேம்பாட்டுப் பணியில் பின்னடைவு ஏற்பட்டு உள்ளதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.