/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனார்த்தன ரெட்டி வீடு முற்றுகை; காங்கிரஸ் தொண்டர்கள் கைது
/
ஜனார்த்தன ரெட்டி வீடு முற்றுகை; காங்கிரஸ் தொண்டர்கள் கைது
ஜனார்த்தன ரெட்டி வீடு முற்றுகை; காங்கிரஸ் தொண்டர்கள் கைது
ஜனார்த்தன ரெட்டி வீடு முற்றுகை; காங்கிரஸ் தொண்டர்கள் கைது
ADDED : ஜன 19, 2026 05:17 AM
பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை ஒரு மையில் பேசிய, பா.ஜ., -- எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டியின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் தொண்டர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். பின், அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பல்லாரியில் பேனர் கட்டியதால், கடந்த 1 ம் தேதி ஏற்பட்ட கலவரத்தில், துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் காங்கிரஸ் தொண்டர் ராஜசேகர் ரெட்டி என்பவர் உயிரிழந்தார். இது குறித்து சி.ஐ.டி., விசாரித்து வருகிறது.
இந்த வழக்கில் காங்கிரஸ் அரசை கண்டித்து, பல்லாரியில் நேற்று முன்தினம் பா.ஜ., சார்பில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் எம்.எல்.ஏ., ஜனார்த்தன ரெட்டி பேசுகையில், 'எனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கேட்ட போது, துணை முதல்வர் சிவகுமார் கிண்டல் செய்யும் வகையில் பேசினார். அவர் துணை முதல்வராக இருந்து, மாநிலத்திற்கு செய்தது என்ன' என்று கேட்டதுடன், ஒருமையில் பேசினார்.
இதனை கண்டித்து பெங்களூரு ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன், நேற்று காலையில் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். அவரது வீட்டை முற்றுகையிடவும் முயன்றனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், கர்நாடக காங்கிரஸ் பொது செயலர் மனோகர் உள்ளிட்டோரை கைது செய்து வேன்களில் ஏற்றி அழைத்து சென்றனர். சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

