முதல்வர் சிவகுமார் மீது காங்., ஹரிபிரசாத் அதிருப்தி
முதல்வர் சிவகுமார் மீது காங்., ஹரிபிரசாத் அதிருப்தி
ADDED : செப் 15, 2026 09:08 PM

பெங்களூரு: முதல்வர் சிவகுமார் அரசின் 100வது நாள் நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு விடுக்கவில்லை என்று, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் அதிருப்தி அடைந்துள்ளார்.
முதல்வராக சிவகுமார் பதவியேற்று கடந்த 10ம் தேதியுடன் 100 நாட்கள் ஆனது. இதனை கொண்டாடும் வகையில், பெங்களூரு விதான் சவுதாவில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் தலைவரான தன்னை அழைக்கவில்லை என்று முதல்வர் சிவகுமார் மீது, காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத் அதிருப்தி அடைந்துள்ளார். மேலிட தலைவர்களிடமும், முதல்வர் மீது புகார் அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சிவகுமார் கூறுகையில், ''எனது அரசின் 100வது நாள் சாதனை நிகழ்ச்சிக்கு, அனைத்து எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களை அழைத்தேன். எம்.எல்.சி.,யான எங்கள் கட்சி தலைவர் ஹரிபிரசாத்தும் அழைக்கப்பட்டார். மரபு சார்ந்த காரணங்களால் அவர் மேடைக்கு அழைக்கப்படவில்லை. நிகழ்ச்சிக்கு தனக்கு அழைப்பு இல்லை என ஹரிபிரசாத் வெளிப்படையாக கூறினாரா?,'' என்றார்.
