பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை
பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை
UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 07:14 PM
பெங்களூரு: பெங்களூரில் பச்சை, மஞ்சள், ஊதா ஆகிய நான்கு வழித்தடங்களில், 96 கி.மீ., தொலைவில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில்களால் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைகிறது.
இருப்பினும், வரும் காலங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் என்பதால், மெட்ரோ ரயில் சேவையை விரிவாக்கம் செய்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
அதாவது, பெங்களூரின் புறநகர் பகுதிகளான துமகூரு, ராம்நகர், பிடதி, அத்திபள்ளி, ஹொஸ்கோட் வரை, மெட்ரோ சேவையை விரிவாக்கம் செய்வது குறித்து, பெங்களூரு மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்.
வரும் 2037ம் ஆண்டிற்குள், 312 கி.மீ., துாரத்துக்கு மெட்ரோ ரயில்சேவையை விரிவுபடுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் மிகவும் குறையும்; அதுபோல, மெட்ரோ பயணியரும் பயனடைவர்.
