/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ரூ.33,000 கோடி நிலுவை தொகை காங்., அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் கெடு
/
ரூ.33,000 கோடி நிலுவை தொகை காங்., அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் கெடு
ரூ.33,000 கோடி நிலுவை தொகை காங்., அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் கெடு
ரூ.33,000 கோடி நிலுவை தொகை காங்., அரசுக்கு ஒப்பந்ததாரர்கள் கெடு
ADDED : அக் 18, 2025 04:50 AM

பெங்களூரு: 'நிலுவை தொகை 33,000 கோடி ரூபாயை, நவம்பர் மாதம் முடிவதற்குள் விடுவிக்க வேண்டும்' என, காங்கிரஸ் அரசுக்கு, ஒப்பந்ததாரர்கள் சங்கம் கெடு விதித்துள்ளது.
கர்நாடக ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் மஞ்சுநாத், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
அரசின் பல துறைகளில் பணிகளை எடுத்து செய்த ஒப்பந்ததாரர்களுக்கு 52,000 கோடி ரூபாய் தொகை நிலுவை இருந்தது. இதில் தற்போது 19,000 கோடி ரூபாய் விடுவித்துள்ளனர்.
மீதம் 33,000 கோடி ரூபாய் விடுவிக்காமல் அரசு இழுத்தடிக்கிறது. நவம்பர் மாதம் முடிவதற்குள் நிலுவை தொகை விடுவிக்க வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு எதிராக கவர்னரிடம் புகார் செய்வோம்.
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் தேசிய பொதுச் செயலர் வேணுகோபால் ஆகியோரை சந்தித்து புகார் செய்வோம்.
அதிகபட்சமாக நீர்ப்பாசனத்துறை 12,000 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளது. பஞ்சாயத்து ராஜ் துறை 3,600 கோடி ரூபாய்; சிறிய நீர்ப்பாசன துறை 3,200 கோடி ரூபாய்; நகர்ப்புற மேம்பாட்டுத் துறை 2,000 கோடி ரூபாய்; வீட்டு வசதித்துறை 1,200 கோடி ரூபாய்; தொழிலாளர் நலத்துறை 800 கோடி ரூபாய் விடுவிக்க வேண்டும்.
சீனியாரிட்டி 'நிலுவை தொகை அவசரமாக தேவைப்பட்டால், ஒப்பந்ததாரர்கள் சங்கம் நீதிமன்றம் மூலம் சட்ட போராட்டம் நடத்தலாம்' என, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார். நாங்கள் நீதிமன்றம் செல்ல மாட்டோம். வேலையை நிறுத்த போராட்டம் செய்வோம்.
பொதுப்பணித்துறை சீனியாரிட்டி அடிப்படையில், ஒப்பந்ததாரர்களுக்கு பணம் விடுவிக்கிறது. மற்ற துறைகள் இதை பின்பற்றவில்லை. இரண்டு, மூன்று முறை எங்களை ஆலோசனை நடத்த அழைத்த முதல்வர், கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டார். இதற்கான காரணம் தெரியவில்லை.
மாற்றங்கள் வெளிமாநில ஒப்பந்ததாரர்கள் பயன்பெறும் வகையில் டெண்டர்களில் பல மாற்றங்கள் செய்துள்ளனர். இது சரியல்ல. இந்த அரசு ஊழல் செய்யவில்லை என்றும், கமிஷன் கேட்கவில்லை என்றும் நான் கூறவில்லை. 40, 60, 80 என, கமிஷன் கேட்கின்றனர் என்றும் சொல்ல மாட்டேன்.
எங்களுக்கு தேவை, நாங்கள் வேலை செய்த பணம். மாநிலத்தில் 90 சதவீத ஒப்பந்ததாரர்கள் தரமான வேலை செய்பவர்கள். அவர்கள் வயிற்றில் அடிக்க வேண்டாம் என்று அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் நிலுவை தொகை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்த, ஒப்பந்ததாரர்கள் சங்க முக்கியஸ்தர்களுக்கு, துணை முதல்வர் சிவகுமார் நேற்று மாலை அழைப்பு விடுத்தார். இன்று விதான் சவுதாவில் ஆலோசனை நடத்துகின்றனர்.