தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ புனித வளனார் பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா 

 புனித வளனார் பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா 

 புனித வளனார் பல்கலையில் நாளை பட்டமளிப்பு விழா 


ADDED : செப் 26, 2026 03:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 26, 2026 03:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரு லால்பாக் ரோட்டில் புகழ்பெற்ற, புனித வளனார் பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் மூன்றாவது ஆண்டு பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஆடிட்டோரியத்தில் நாளை காலை 10:00 மணிக்கு துவங்குகிறது.

தலைமை விருந்தினராக 'பேர்பேக்ஸ் பைனான்சியல் ஹோல்டிங்ஸ்' நிறுவன தலைவர் பிரேம் வட்கா பங்கேற்கிறார்.

சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக உள்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, ராஜ்யசபா காங்கிரஸ் எம்.பி., மன்சூர் அலிகான் உட்பட பலர் பங்கேற்கின்றனர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் அருட்தந்தை டயோனிசியஸ் வாஸ், துணைவேந்தர் விக்டர் லோபோ தலைமையில் பட்டமளிப்பு விழா நடக்கிறது.

பல்கலைக்கழக அளவில், 'டாப் ரேங்க்' எடுத்த 123 மாணவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும், 2,300 மாணவர்களுக்கு அவர்கள் படித்த துறைகளின் சார்பில், தனித்தனி அரங்குகளில் வைத்து சான்றிதழ்கள் வினியோகிக்கப்படுகின்றன. துணை துணைவேந்தர் ரபி அகிபா அங்கிராஸ் நன்றி கூறுகிறார்.

பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை, பல்கலைக்கழக பதிவாளர் சையது வாஜித், தேர்வு கட்டுப்பாட்டாளர் காட்வின் டிசோசா உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us