/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூட்டுறவு வங்கி இயக்குநர் தேர்தல் 2 எம்.எல்.ஏ., போட்டியின்றி தேர்வு
/
கூட்டுறவு வங்கி இயக்குநர் தேர்தல் 2 எம்.எல்.ஏ., போட்டியின்றி தேர்வு
கூட்டுறவு வங்கி இயக்குநர் தேர்தல் 2 எம்.எல்.ஏ., போட்டியின்றி தேர்வு
கூட்டுறவு வங்கி இயக்குநர் தேர்தல் 2 எம்.எல்.ஏ., போட்டியின்றி தேர்வு
ADDED : மே 22, 2025 05:06 AM

கோலார்: கோலார் -- சிக்கபல்லாபூர் மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் தேர்தலில் எம்.எல்.ஏ.,க்கள் ரூபகலா, சுப்பாரெட்டி போட்டியின்றி தேர்வாகினர்.
கோலார் -- சிக்கபல்லாபூர் மாவட்ட கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் தேர்தலில் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இதற்காக 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த தேர்தல் இம்மாதம் 18 ம் தேதி நடக்கிறது.
கோலார் உதவி கலெக்டர் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தங்கவயல் -ரூபகலா, கோலார் -கொத்துார் மஞ்சுநாத், பாகேபள்ளி -சுப்பாரெட்டி உட்பட 54 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது நேற்று பரிசீலனை நடந்தது. அனைத்து மனுக்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
மொத்தம் உள்ள 18 இயக்குநர்களுக்கான தேர்தலில் தங்கவயல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பா ரெட்டி ஆகியோர் தவிர, வேறு யாரும் மனு தாக்கல் செய்யாததால், அவர்கள் இருவரும் போட்டியின்றி தேர்வாகினர்.
மீதி 16 இடங்களுக்கு மட்டுமே வரும் 28 தேதி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது. அன்றைய தினமே ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
தேர்வு பெற்ற 18 இயக்குநர்கள் சேர்ந்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். தலைவர் பதவியை கைப்பற்ற காங்கிரசில் இரு கோஷ்டிகள் மும்முரமாக உள்ளன.
கடந்த முறை பைலஹள்ளி கோவிந்த கவுடா தலைவராக இருந்தார். இம்முறை அவரின் தலைமையிலான காங்கிரஸ் கோஷ்டி மீண்டும் நிர்வாகத்தை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்கு எதிராக, கோலார் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் தலைமையில் மற்றொரு கோஷ்டி களத்தில் இறங்கி உள்ளது. இதனால் கூட்டுறவு சங்க தேர்தல் சூடு பிடித்துள்ளது.