/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லஞ்ச பணத்தை திருப்பி கேட்டு அதிகாரியை துரத்தும் கவுன்சிலர்
/
லஞ்ச பணத்தை திருப்பி கேட்டு அதிகாரியை துரத்தும் கவுன்சிலர்
லஞ்ச பணத்தை திருப்பி கேட்டு அதிகாரியை துரத்தும் கவுன்சிலர்
லஞ்ச பணத்தை திருப்பி கேட்டு அதிகாரியை துரத்தும் கவுன்சிலர்
ADDED : ஆக 07, 2025 05:44 AM
மாண்டியா :
லஞ்சம் கொடுத்தும் வேலை நடக்காததால், கோபமடைந்த கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் ஒருவர், தான் கொடுத்த பணத்தை திருப்பித் தரும்படி கேட்டு, பஞ்சாயத்து அதிகாரியை பின் தொடர்ந்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவியுள்ளது.
மாண்டியா மாவட்டம், கே.ஆர்.பேட் தாலுகாவின் மந்தகெரே கிராம பஞ்சாயத்தில், பஞ்சாயத்து மேம்பாட்டு அதிகாரியாக பணியாற்றுபவர் சுவர்ணா, 45. இதே கிராம பஞ்சாயத்து கவுன்சிலராக இருப்பவர் ஜெகதீஷ், 35.
மந்தகெரே கிராமத்தில், 100 நாள் வேலை திட்டத்தின் கீழ், கூலி தொழிலாளர்களுக்கு கிராம பஞ்சாயத்து உறுப்பினர் ஜெகதீஷ், வேலை வாய்ப்பு அளித்திருந்தார். தொழிலாளர்களுக்கு கூலித்தொகை வழங்கும்படி பி.டி.ஓ., சுவர்ணாவிடம் பில்களை சமர்ப்பித்தார். ஆனால் அவரோ 15,000 ரூபாய் லஞ்சம் கொடுத்தால், பில் தொகை கிடைக்கும் என, கூறியதாக தெரிகிறது.
ஜெகதீஷும் 15,000 ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார். பணம் கொடுத்து நீண்ட நாட்களாகியும், தொகையை அவர் விடுவிக்கவில்லை. இதனால் எரிச்சல் அடைந்த ஜெகதீஷ், அதிகாரி சுவர்ணாவை தினமும் ஸ்கூட்டரில் பின் தொடர்ந்து, பணத்தை திருப்பித் தரும்படி பிடிவாதம் பிடிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
ஜெகதீஷின் குற்றச்சாட்டை சுவர்ணா மறுத்துள்ளார். பணிகளில் ஜெகதீஷ் முறைகேடு செய்துள்ளதாக குற்றம் சாட் டியுள்ளார்.