ADDED : ஜூன் 20, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
ஹொஸ்கோட்: பெங்களூரு ரூரல் தெல்லஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அருண், 35, இவரது மனைவி அனுஷா, 32. தம்பதியின் மகள்கள் அனுஷ்கா, 5, ஹர்னா, 2.
சுலிபெலேயில் வசிக்கும் உறவினர் வீட்டிலிருந்து மகள்கள், மனைவியுடன் பைக்கில் நேற்று மாலை வந்து கொண்டிருந்தனர்.
அந்த வழியாக வந்த பி.எம்.டி.சி., பஸ், பைக் மீது மோதியது. பைக்கில் இருந்து துாக்கி வீசப்பட்ட அருண், அனுஷா, ஹர்னா சம்பவ இடத்திலேயே இறந்தனர். அனுஷ்காவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
