/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லாட்ஜ் அறையில் தீ விபத்து காதல் ஜோடி உடல் கருகி பலி
/
லாட்ஜ் அறையில் தீ விபத்து காதல் ஜோடி உடல் கருகி பலி
லாட்ஜ் அறையில் தீ விபத்து காதல் ஜோடி உடல் கருகி பலி
லாட்ஜ் அறையில் தீ விபத்து காதல் ஜோடி உடல் கருகி பலி
ADDED : அக் 10, 2025 04:44 AM
எலஹங்கா: லாட்ஜ் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில், காதல் ஜோடி உடல் கருகி இறந்தனர்.
கதக்கை சேர்ந்தவர் ரமேஷ், 24. பாகல்கோட்டின் ஹுன்குந்தை சேர்ந்தவர் காவேரி படிகர், 22. இருவரும் காதலித்து வந்தனர். பெங்களூரு எலஹங்காவில் உள்ள தனியார் நிறுவனத்தில் ரமேஷும், மசாஜ் சென்டரில் காவேரியும் வேலை செய்தனர்.
மசாஜ் சென்டர் அருகே உள்ள, ரெஸ்டாரண்ட் கட்டடத்தில் 3வது மாடியில் அமைந்து உள்ள லாட்ஜிற்கு நேற்று காலை ரமேஷும், காவேரியும் சென்றனர். அறை எடுத்துத் தங்கினர்.
நேற்று மாலை 5:30 மணிக்கு, மசாஜ் சென்டர் உரிமையாளர் மொபைல் போனுக்கு, காவேரி அழைத்தார். “நானும், ரமேஷும் தங்கியிருந்த அறையில் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது. நான் அறையின் கழிப்பறைக்குள் சிக்கி உள்ளேன். ரமேஷ் மீது தீப்பிடித்துவிட்டது. எங்களை காப்பாற்றுங்கள்,” என்று கூறினார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த, மசாஜ் சென்டர் உரிமையாளர், தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். பின், லாட்ஜ் அறைக்குள் சென்று எலஹங்கா நியூ டவுன் போலீசார் பார்த்தபோது, உடல்கருகிய நிலையில் காதல் ஜோடி இறந்து கிடந்தனர்.
சம்பவம் குறித்து டி.சி.பி., சஜித் கூறுகையில், ''தீ விபத்தில் காதல் ஜோடி இறந்து உள்ளனர். தீ விபத்து எப்படி ஏற்பட்டது என தெரியவில்லை. மின்கசிவா அல்லது வேறு காரணமா என்று விசாரிக்கிறோம். தடய அறிவியல் ஆய்வகத்தினரும் வரவழைக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல் ஊற்றி காதல் ஜோடி தற்கொலை செய்தனரா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படும்,'' என்றார்.