தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்

வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்

வெயிலால் 8 மாவட்டங்களில் நீதிமன்ற பணி நேரம் மாற்றம்


ADDED : ஏப் 08, 2025 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 08, 2025 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு; கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் ஜென்ரல் பரத் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:

கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கலபுரகி கிளைக்கு உட்பட்ட பல்லாரி, பீதர், கொப்பால், ராய்ச்சூர், கலபுரகி, யாத்கிர் ஆகிய மாவட்டங்கள்; பெலகாவி கிளைக்கு உட்பட்ட விஜயபுரா, பாகல்கோட் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிவில், கிரிமினல் நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், தொழிலாளர் நீதிமன்றங்களின் பணி நேரம் மாற்றம் செய்யப்படுகிறது.

வரும் மே 31ம் தேதி வரை, தினமும் காலை 7:30 முதல் மதியம் 2:00 மணி வரை நீதிமன்ற அலுவலக பணிகள் நடக்கும்.

இது போல் தினமும் காலை 8:00 முதல் 11:00 மணி வரையிலும்; 11:30 முதல் மதியம் 1:30 மணி வரை நீதிமன்ற விசாரணை நடக்கும். 11:00 முதல் 11:30 மணி வரை இடைவேளை விடப்படும்.

ஏப்., 26 மற்றும் மே 24ம் தேதிகளான நான்காவது சனிக்கிழமைகளில், காலை 7:30 முதல் மதியம் 12:00 மணி வரை நீதிமன்றம் இயங்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us