தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : பிப் 14, 2026 04:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கஞ்சா விற்ற 74 பேர் கைது

'தங்கவயல் போலீஸ் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பல இடங்களில், இரண்டு ஆண்டுகளில், கஞ்சா விற்பனை செய்ததாக, 74 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி வந்த, 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, மாவட்ட எல்லையை விட்டு வெளியேற்றப்பட்டனர்' என, தங்கவயல் போலீஸ் மாவட்ட எஸ்.பி., ஷிவன்ஷு ராஜ்புத் தெரிவித்துள்ளார்.

செயின் பறித்தவர்கள் கைது

கோலாரின் குருபரப்பேட்டை தெருவில், ஜனவரி, 21ம் தேதி உமா என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரது கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

கோலார் நகர போலீசார் விசாரணையில், 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் மூலம், தமிழகத்தின் வாணியம்பாடி முகமது யாசின், 25. ஜீலன், 24, ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6.25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், ஒரு இருசக்கர வாகனம் மீட்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us