தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்

 கிரைம் கார்னர்


ADDED : ஜூன் 28, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 05:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாக்கு விளைச்சல் தீக்கிரை

உத்தர கன்னடா, சித்தாபுராவின், ஷேடிதன்டகல் கிராமத்தில் வசிக்கும் விநாயக் மஞ்சுநாத் என்பவர், 70க்கும் மேற்பட்ட பைகளில் பாக்கு சேகரித்து, வீட்டில் வைத்திருந்தார்.

நேற்று மதியம் இவரது வீட்டில் தீப்பிடித்ததில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களும், பாக்கும் தீக்கிரையாகின. தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர், தீயை கட்டுப்படுத்தினர்.

கடத்திய கோதுமை மீட்பு

சிக்கபல்லாபூர், சிந்தாமணியின், ஹெச் கிராஸ் அருகில், நேற்று காலை போலீசார் சோதனையிட்ட போது, லாரியில் கடத்தப்பட்ட 'அன்னபாக்யா' திட்டத்தின் கோதுமை கடத்தப்படுவதை கண்டுபிடித்தனர். அரசு உரைவிட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கோதுமையை, கடத்துவது தெரிந்தது. 14 டன் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.

பிரசாதம் சாப்பிட்டவர்கள் பாதிப்பு

துமகூரு, பாவகடாவின், கே.சேவாலாலபுரா கிராமத்தில் உள்ள லட்சுமி கோவிலில், நேற்று திருவிழா நடந்தது. இதில் அன்னதான பிரசாதம் சாப்பிட்ட, 150 க்கும் மேற்பட்டோர், வாந்தி, வயிற்று போக்கு ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தகவலறிந்து அங்கு வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு மாதிரியை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பினர்.

மாணவர் தற்கொலை

உத்தர கன்னடா, சித்தாபுராவின், கானசூரு கிராமத்தில் வசித்த அபிராம் வெங்கடரமணா, 21, பி.காம்., படித்து வந்தார். இம்முறை நடந்த தேர்வில், மூன்று பாடங்களில் தோல்வி அடைவார் என்ற பீதியில் இருந்தார். இதனால் நேற்று காலை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us