தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ தாவணகெரே பயங்கரவாதி ராமர் கோவிலை தகர்க்க சதி

 தாவணகெரே பயங்கரவாதி ராமர் கோவிலை தகர்க்க சதி

 தாவணகெரே பயங்கரவாதி ராமர் கோவிலை தகர்க்க சதி


ADDED : ஜூன் 24, 2026 11:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 11:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்ததாக, கடந்த, 4ம் தேதி துமகூரின் அல்லா பக், 23, தாவணகெரேயின் ஜமீர் கான், 23, கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் கொடுத்த தகவலின்படி, உத்தர பிரதேச மாநிலத்தின் ஷாஜஹான்பூரின் சுஹேல், 20, என்பவரும் நேற்று முன்தினம், தாவணகெரேயின் ஹரிஹராவில் கைது செய்யப்பட்டார்.

சுஹேல் மொபைல் போனை ஆய்வு செய்த போது, பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ராணா பாய் என்பவருடன் அடிக்கடி, வாட்ஸாப் அழைப்பில் பேசியது தெரிந்தது.

இது தவிர சுஹேல் மொபைல் போனில் அயோத்தி ராமர் கோவில், புகைப்படங்களும் இருந்தன. இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, பயங்கரவாத அமைப்பினர் பேச்சை கேட்டு, ராமர் கோவிலை தகர்க்க சதி திட்டம் தீட்டியதை ஒப்பு கொண்டார். மேலும் சிலரின் பெயர்களையும் அவர் கூறியுள்ளார்.

கடந்த, 20 நாட்களுக்கு முன் தான், உத்தர பிரதேசத்தில் இருந்து தாவணகெரேவுக்கு சுஹேல் வந்து இருந்தார்.

தொழிற்சாலையில் பெயின்டராக வேலை செய்த அவர், வாடகை வீட்டில் வசித்தார். அந்த வீட்டில் அவருடன் உத்தர பிரதேச மாநிலத்தின், ஏழு பேர் வசித்தனர். அவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தீவிர விசாரணை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us