/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
11 பேர் பலி வழக்கு தயானந்தா இன்று ஆஜர்
/
11 பேர் பலி வழக்கு தயானந்தா இன்று ஆஜர்
ADDED : ஜூன் 23, 2025 09:21 AM
பெங்களூரு : கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான வழக்கில், போலீஸ் கமிஷனர் பதவியில் இருந்து, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட தயானந்தா உள்ளிட்ட, போலீஸ் அதிகாரிகள் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.
ஆர்.சி.பி., அணி ஐ.பி.எல்., கோப்பையை வென்றதை கொண்டாடும் வகையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கடந்த 4 ம் தேதி பாராட்டு விழா நடந்தது. மைதானம் முன்பு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதுகுறித்து நீதிபதி, மாஜிஸ்திரேட், சி.ஐ.டி., விசாரணை நடக்கிறது.
மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தும், பெங்களூரு கலெக்டர் ஜெகதீஷ், கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களிடம் வாக்குமூலம் பெற்று உள்ளார். நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த, டி.என்.ஏ., தனியார் நிறுவன ஊழியர்களிடமும் விசாரித்து தகவல் பெற்றார்.
இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகும்படி, சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகள் தயானந்தா, விகாஸ்குமார், சேகர், பாலகிருஷ்ணா, கிரிஷுக்கு நோட்டீஸ் அனுப்பபட்டது. அவர்கள் ஐந்து பேரும் இன்று விசாரணைக்கு ஆஜராக உள்ளனர்.