/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிறைமாத கர்ப்பிணியை கொன்ற அண்ணன்களுக்கு மரண தண்டனை
/
நிறைமாத கர்ப்பிணியை கொன்ற அண்ணன்களுக்கு மரண தண்டனை
நிறைமாத கர்ப்பிணியை கொன்ற அண்ணன்களுக்கு மரண தண்டனை
நிறைமாத கர்ப்பிணியை கொன்ற அண்ணன்களுக்கு மரண தண்டனை
ADDED : அக் 11, 2025 05:13 AM
கலபுரகி: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தங்கையை கொன்ற இரண்டு சகோதரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கர்நாடக உயர் நீதிமன்ற கலபுரகி கிளை நேற்று உறுதி செய்து தீர்ப்பளித்தது.
விஜயபுரா மாவட்டம், முத்தேபிஹால் தாலுகாவின், குன்டனகல் கிராமத்தை சேர்ந்தவர் இப்ராகிம் சாப், 31. இவரது சகோதரர் அக்பர், 29. இவர்களின் தங்கை பானுபேகம், 24. இவர், தலித் சமுதாயத்தின் சைபண்ணா என்பவரை காதலித்தார்.
இதையறிந்து குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 'நம் சமுதாயத்தினரையே திருமணம் செய்ய வேண்டும்' என, மிரட்டினர். ஆனால் சகோதர்கள் மற்றும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, 2017ல் சைபண்ணாவை பானுபேகம் திருமணம் செய்து கொண்டார். அதே கிராமத்தில் வசித்தார்.
சில மாதங்களில் அவர் கருவுற்றார். வேறு ஜாதியை சேர்ந்தவரை தங்கை திருமணம் செய்து கொண்டதை, சகோதரர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. நிறைமாத கர்ப்பிணியாக இருந்தபோது, அண்ணன்களும், குடும்பத்தினரும் பானு பேகம் வீட்டுக்குள் நுழைந்து தீ வைத்து எரித்துக் கொலை செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்திய முத்தேபிஹால் போலீசார், கொளையாளிகளை கைது செய்தனர். விசாரணையை முடித்து, விஜயபுரா மாவட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவர்களின் குற்றம் உறுதியானதால், அண்ணன்களுக்கு மரண தண்டனையும், பானுபேகத்தின் தாய் உட்பட, குடும்பத்தினர் ஐவருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து கர்நாட உயர்நீதிமன்ற கலபுரகி கிளையில் குற்றவாளிகள் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், 'நிறைமாத கர்ப்பிணியை கொன்ற கொலையாளிகளுக்கு, மாவட்ட நீதிமன்றம் விதித்த தண்டனை சரிதான்' என, கூறி அண்ணன்களுக்கு மரண தண்டனையும், மற்ற ஐவருக்கு ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து, நேற்று மாலை தீர்ப்பளித்தது.