/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை
/
சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை
சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை
சிறுமி பலாத்காரம் செய்து கொலை செய்தவருக்கு மரண தண்டனை
ADDED : செப் 27, 2025 05:03 AM

பெலகாவி: எட்டு வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்றவருக்கு மரண தண்டனை விதித்து, பெலகாவி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பெலகாவி மாவட்டம், குடச்சியில் வசிப்பவர் பரதேஷ் ராவசாப் மிர்ஜி, 28. இப்பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி, 2019 அக்டோபர் 15ம் தேதி மாலை, கடையில் சாக்லேட் வாங்கிக் கொண்டு, வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாள்.
அப்போது பரதேஷ் ராவசாப் மிர்ஜி, சிறுமியிடம் நயமாக பேசி, தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பலாத்காரம் செய்தார். சிறுமி அலறியதால், கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். சிறுமியின் சடலத்தில் 20 கிலோ கல்லை கட்டி, தன் வீட்டு அருகில் உள்ள திறந்தவெளி கிணற்றுக்குள் வீசினார்.
மகளை காணாத பெற்றோர், குடச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். விசாரணையில், மோப்ப நாய், திறந்தவெளி கிணற்றின் அருகில் வந்து நின்றது. ஆழ்துளை கிணறுகளை பழுது பார்க்க பயன்படுத்தும் கேமராவை, கிணற்றுக்குள் போலீசார் இறக்கி தேடியபோது, சிறுமியின் விரல் தெரிந்தது. அதன்பின் தண்ணீரை காலி செய்துவிட்டு, தேடி, சிறுமியின் சடலத்தை போலீசார் மீட்டனர்.
விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார், சம்பவ நாளன்று சிறுமியுடன் பரதேஷ் ராவசாப் மிர்ஜி பேசியதை கண்டுபிடித்தனர். அவரை விசாரித்தபோது, சிறுமியை பலாத்காரம் செய்து, கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
நீதிமன்ற விசாரணையில் பரதேஷ் ராவசாப் மிர்ஜியின் குற்றம் உறுதியானதால், அவருக்கு மரண தண்டனை, 45,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று மதியம் நீதிபதி புஷ்பலதா தீர்ப்பளித்தார். கொலையான சிறுமியின் பெற்றோருக்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கும்படி, மாவட்ட சட்டசேவைகள் ஆணையத்துக்கு நீதிபதி உத்தரவிட்டார்.