sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 2,000 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்க முடிவு

 2,000 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்க முடிவு

 2,000 எலக்ட்ரிக் பஸ்கள் வாங்க முடிவு


ADDED : பிப் 23, 2026 04:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 04:50 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பி.எம்.டி.சி.,யில் இயங்கி வரும் மிகவும் பழமையான 2,000 பஸ்கள் அகற்றப்பட உள்ளன. இதற்கு பதிலாக, 2,000 எலக்ட்ரிக் பஸ்கள் நடப்பு ஆண்டின் இறுதிக்குள் சேவைக்கு வரும்,'' என போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

பெங்களூரில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில், பி.எம்.டி.சி.,யில் பயன்பாட்டில் உள்ள மிகவும் பழமையாக உள்ள எரிபொருளில் இயங்கக்கூடிய 2,000 பஸ்கள் விரைவில் அகற்றப்பட உள்ளன.

இதற்கு பதிலாக 2,000 எலக்ட்ரிக் பஸ்கள் சேவைக்கு வர உள்ளன. இது, நடப்பு ஆண்டின் இறுதிக்குள் முடிக்கப்படும். எலக்ட்ரிக் பஸ்களால் ஏற்படும் சாலை விபத்துகள் சமீபகாலமகாக அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது.

ஒப்பந்த அடிப்படையில் எலக்ட்ரிக் பஸ்களில் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்படுவதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப்பட உள்ளன. ஓட்டுநர்களின் பயிற்சிக்கு அதீத முக்கியத்துவம் வழங்கப்படும். ஓட்டுநரின் திறமைக்கு ஏற்ப முக்கியத்துவம் கொடுக்கப்படும். ஓட்டுநர்கள் கட்டாயம் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும், பெங்களூருக்கு வெளிப்புறத்தில் ஆறு மாத காலம் பயிற்சி பெற வேண்டும். பி.எம்.டி.சி.,யில் கடந்த ஆண்டுகளில் புதிய பஸ்கள் வாங்கப்படாததால் பல பஸ்களின் ஆயுட்காலம் முடிவடைந்து விட்டன. காங்கிரஸ் அரசின் மகளிர் இலவச பயணம் மூலம் பஸ்களில் செல்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. மத்திய அரசு எலக்ட்ரிக் பஸ்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us