தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ 'குறுக்கு ஓட்டு போட்டவர்களை கண்டறிய மஞ்சுநாதா கோவிலில் சத்தியம் வாங்க முடிவு'

 'குறுக்கு ஓட்டு போட்டவர்களை கண்டறிய மஞ்சுநாதா கோவிலில் சத்தியம் வாங்க முடிவு'

 'குறுக்கு ஓட்டு போட்டவர்களை கண்டறிய மஞ்சுநாதா கோவிலில் சத்தியம் வாங்க முடிவு'


ADDED : ஜூன் 21, 2026 10:47 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2026 10:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ' 'எம்.எல்.சி., தேர்தலில் குறுக்கு ஓட்டு போடப்பட்ட விவகாரத்தில் உண்மையை கண்டறிய, பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலில் சத்திய பிரமாணம் எடுக்க வைப்பேன்,'' என, பா.ஜ., தலைவர் விஜயேந்திரா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

எம்.எல்.சி., தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவாக, எங்கள் கட்சியின் சில எம்.எல்.ஏ.,க்கள் குறுக்கு ஓட்டு போட்டுள்ளனர். அவர்கள் யார் என்று கண்டறிய முயற்சி செய்கிறோம். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.

உண்மையை கண்டறிய எங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோவிலுக்கு அழைத்து சென்று சத்திய பிரமாணம் செய்ய வைப்பேன். எங்கள் கட்சியின், 63 எம்.எல்.ஏ.,க்கள் மீதும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. சத்திய பிரமாணம் மூலம் தெளிவான முடிவு கிடைக்கும். குறுக்கு ஓட்டு போட்ட விவகாரத்தில் தொண்டர்கள் காயப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

விஜயேந்திராவின் இந்த முடிவுக்கு பல எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், ராஜாஜிநகர் எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us