/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமணம் செய்வதாக கூறி 3 பேரை ஏமாற்றினார்: நடிகை மீது கிரிக்கெட் அணி உரிமையாளர் 'பகீர்'
/
திருமணம் செய்வதாக கூறி 3 பேரை ஏமாற்றினார்: நடிகை மீது கிரிக்கெட் அணி உரிமையாளர் 'பகீர்'
திருமணம் செய்வதாக கூறி 3 பேரை ஏமாற்றினார்: நடிகை மீது கிரிக்கெட் அணி உரிமையாளர் 'பகீர்'
திருமணம் செய்வதாக கூறி 3 பேரை ஏமாற்றினார்: நடிகை மீது கிரிக்கெட் அணி உரிமையாளர் 'பகீர்'
ADDED : நவ 19, 2025 09:05 AM

பெங்களூரு: 'திருமணம் செய்வதாக கூறி, மூன்று பேரை ஏமாற்றினார்' என, நடிகை கிருஷி தபந்தா மீது, கிரிக்கெட் அணி உரிமையாளர் பகீர் குற்றச்சாட்டு கூறி உள்ளார்.
கன்னட திரையுலகில் நடிகையாக இருப்பவர் கிருஷி தபந்தா, 36. இவரும், பெங்களூரு ஆர்.ஆர்.நகரை சேர்ந்த தொழிலதிபரும், பல்லாரி டஸ்கர்ஸ் கிரிக்கெட் அணி உரிமையாளருமான அரவிந்த் வெங்கடேஷ் ரெட்டி, 40 என்பவரும், கடந்த மூன்று ஆண்டுகளாக நெருங்கிய தொடர்பில் இருந்தனர்.
திடீரென திருமணத்திற்கு மறுத்ததால் தன்னை தாக்கியதுடன், ஆடைகளை கிழித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கிருஷி அளித்த புகாரில், அரவிந்த் ரெட்டி கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
'அரவிந்த் ரெட்டியுடன் உறவில் இருந்தது உண்மை; ஆனால் அவரது நடத்தையால் விலகிச் சென்றேன்' என்றும் கூறினார்.
மிரட்டல் இந்நிலையில், அரவிந்த் ரெட்டி நேற்று அளித்த பேட்டி:
என்னை மட்டும் நடிகை கிருஷி ஏமாற்றவில்லை. சமூகத்தில் பெரிய நபர்களாக உள்ள, மேலும் 3 பேரை ஏமாற்றி உள்ளார். திருமணம் செய்வதாக கூறி, மூன்று பேரிடம் இருந்து 40 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரை பணம், நகைகள் வாங்கி உள்ளார். பின், திருமணத்திற்கு மறுத்துள்ளார்.
பணம், நகைகளை திருப்பிக் கேட்டதால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டி உள்ளார். மூன்று பேரில் ஒருவர் துபாயில் உள்ளார். வரும் 21ம் தேதி பெங்களூரு வருகிறார். மற்ற இருவரும் இங்கு உள்ளனர்.
நாங்கள் உறவில் இருந்தபோது, மூன்று பேரை கிருஷி ஏமாற்றியது எனக்கு தெரியாது. எங்கள் பிரச்னை வெளி வந்த பின், அந்த மூன்று பேரும் என்னை தொடர்பு கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
அவதுாறு இந்த விவாகரம் சூடுபிடித்துள்ள நிலையில், தன்னுடைய, 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் கிருஷி வெளியிட்ட பதிவு:
கடந்த சில நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக உள்ளன. என் தனிப்பட்ட விஷயம் இப்போது பகிரங்கமாகிவிட்டது. போலீஸ், சட்டம், ஊடகம் மற்றும் பலரின் ஆதரவுக்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். சிலர் என்னை பற்றி அவதுாறாக பேசுகின்றனர்.
அனைவரும் என்னை நம்புவர் அல்லது ஆதரிப்பர் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ஒருவரை பற்றி தரம் தாழ்ந்து பேச யாருக்கும் உரிமை இல்லை. சமூக ஊடகங்களில் வெறுப்புணர்வை துாண்டும் வகையில் பேசுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
என் பாதுகாப்பு, மன அமைதிக்காக நான் புகார் செய்ய வேண்டி இருந்தது. என் உண்மையின் மீது உறுதியாக இருக்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

