/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு பெங்களூரில் பயணியர் வருத்தம்
/
டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு பெங்களூரில் பயணியர் வருத்தம்
டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு பெங்களூரில் பயணியர் வருத்தம்
டில்லி மெட்ரோ ரயில் கட்டணம் உயர்வு பெங்களூரில் பயணியர் வருத்தம்
ADDED : ஆக 26, 2025 03:09 AM
பெங்களூரு: புதுடில்லி மெட்ரோ ரயிலில் 4 ரூபாய் கட்டணம் உயர்த்தப்பட்டதை பார்த்து, பெங்களூரு மெட்ரோ ரயில் பயணியர் வருத்தப்படுகின்றனர்.
பெங்களூரு மெட்ரோ ரயில் டிக்கெட்டுகள் கடந்த பிப்ரவரியில் 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன. அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 60 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்ந்தது. காரணம் எதுவும் குறிப்பிடாமல், கிட்டத்தட்ட 30 ரூபாய் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இதனால், பயணியர் பலரும் அதிர்ச்சி அடைந்தனர். கட்டணம் உயர்த்தப்பட்டு ஆறு மாதங்கள் ஆகியும், இன்றும் கூட பயணியர் பலரும் மெட்ரோ நிர்வாகத்தை சபித்து கொண்டே ரயிலில் பயணம் செய்கின்றனர்.
நெருப்பு இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல, நாட்டின் தலைநகரான புதுடில்லி மெட்ரோ ரயிலில் கட்டணம் நேற்று முதல் உயர்த்தப்பட்டன. அதிகபட்ச கட்டணம் 60 ரூபாயிலிருந்து 64 ரூபாயக உயர்த்தப்பட்டது. அதாவது வெறும் நான்கு ரூபாய் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்த செய்தியை கேட்ட பெங்களூரு மெட்ரோ ரயிலில் பயணிப்போர் அதிர்ச்சி அடைந்தனர். நாட்டின் தலைநகரிலே வெறும் நான்கு ரூபாய் தான் கட்டண உயர்வு; ஆனால் பெங்களூரில் 30 ரூபாய் உயர்வா; இது என்ன நியாயம் என பலரும் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்தும், மெட்ரோ நிர்வாகத்தை திட்டி தீர்த்தனர்.
இது எதையும் கண்டு கொள்ளாமல், மெட்ரோ ரயில் நிர்வாகம் வழக்கம் போல மவுனம் காத்து வருகிறது.
அநியாயம் இது குறித்து, பெங்களூரு தெற்கு எம்.பி., தேஜஸ்வி சூர்யா தன் 'எக்ஸ'் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
பெங்களூரு மெட்ரோ ரயில் கட்டண உயர்வு அநியாயமானது.
இந்தியாவிலே அதிகமாக மெட்ரோ ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவது பெங்களூரில் தான். கட்டண நிர்ணய குழுவின் அறிக்கையை பொது வெளியில் வெளியிடுவதில் நம்ம மெட்ரோவுக்கு என்ன பிரச்னை.
புதுடில்லியில் 32 கி.மீ.,க்கு மேல் பயணம் செய்வதற்கு 64 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. இதுவே அதிகபட்ச கட்டணமும் ஆகும். அதே சமயம், பெங்களூ ரில் 30 கி.மீ.,க்கு மேல் பயணிக்க 90 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.