sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுவையான பன்னீர் பாயசம்

 சுவையான பன்னீர் பாயசம்

 சுவையான பன்னீர் பாயசம்


ADDED : மார் 14, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2026 06:37 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -: பன்னீர் பயன்படுத்தி குருமா, பாலக் பன்னீர், பிரியாணி உட்பட, பலவிதமான தின்பண்டங்களுக்கு பன்னீர் பயன்படுத்துகின்றனர். சேமியாவில் மட்டுமின்றி, பன்னீரிலும் சுவையான பாயசமும் செய்யலாம். எப்படி செய்வது என, பார்க்கலாம்.

செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில், இரண்டு கப் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். அடுப்பை அணைத்து விட்டு, கொதிக்க வைத்த வென்னீரில் பன்னீரை போட்டு, 15 நிமிடம் ஊற வைக்கவும். அதன்பின் பன்னீரை நீரில் இருந்து எடுத்து, துருவி கொள்ளவும்.

அடுப்பில் அடிகனமான பாத்திரத்தை வைத்து, பாலை ஊற்றவும். பால் கொதித்தவுடன் சர்க்கரை சேர்த்து, மீண்டும் கொதிக்க விடவும். பால் ஓரளவு கெட்டியான பின், பன்னீர் சேர்த்து கை விடாமல் கிளறவும்.

அதன்பின் ஏலக்காய் துாள், குங்குமப்பூபோடவும். நெய்யில் வறுத்த ட்ரை ப்ரூட்ஸ்களை சேர்த்து, 15 நிமிடம் கொதிக்க வைத்தால், இனிப்பான பன்னீர் பாயசம் தயார். குட்டீஸ்கள் முதல், பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். இந்த பாயசம் இரண்டு நாட்கள் வரை கெடாது. பிரிஜ்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.

தேவையான பொருட்கள்: * பன்னீர் - 400 கிராம் * பால் - 2 லிட்டர் * குங்குமப்பூ - 1 சிட்டிகை * ஏலக்காய் துாள் - 1 ஸ்பூன் * ட்ரை ப்ரூட்ஸ் - அரை கப் * சர்க்கரை - ஒரு கப்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us