/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கித்துார் ராணி சமாதி பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை
/
கித்துார் ராணி சமாதி பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை
கித்துார் ராணி சமாதி பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை
கித்துார் ராணி சமாதி பாரம்பரிய சின்னமாக அறிவிக்க கோரிக்கை
ADDED : மார் 30, 2025 03:56 AM
பெங்களூரு : 'கித்துார் ராணி சென்னம்மாவின் சமாதியை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
பெலகாவி மாவட்டம், பைலஹொங்கலில் வீர ராணி கித்துார் ராணி சென்னம்மாவின் சமாதி உள்ளது. ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்ட வீர பெண்களில் இவரும் ஒருவர். அவரின் துணிச்சல், வெல்ல முடியாத மனப்பான்மை, நாடு முழுதும் உள்ள தலைமுறையினருக்கு தொடர்ந்து உத்வேகம் அளிக்கும்.
சுதந்திர போராட்டத்தின் அழிக்க முடியாத உணர்வை குறிக்கும் புனிதமான இடமாகும். 1958ல் பண்டைய பாரம்பரிய சின்னங்கள், வரலாற்று தளங்கள் சட்டத்தின் கீழ், இதை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பாரம்பரிய சின்னமாக அறிவிக்க இந்திய தொல்லியல் ஆய்வு துறைக்கு உத்தரவிட வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.