தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விநாயகர் சிலைகள் கரைக்க குளம் அமைக்க கோரிக்கை

 விநாயகர் சிலைகள் கரைக்க குளம் அமைக்க கோரிக்கை

 விநாயகர் சிலைகள் கரைக்க குளம் அமைக்க கோரிக்கை


ADDED : செப் 27, 2026 11:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 27, 2026 11:09 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தங்கவயல்: ''விநாயகர் சிலைகள் கரைப்புக்கு சுத்தமான நீருள்ள குளம் அமைக்க வேண்டும்,'' என்று தங்கவயல் நகர வி.ஹெச்.பி., தலைவர் மஞ்சுநாத் வலியுறுத்தி உள்ளார்.

ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலில் மஞ்சுநாத் அளித்த பேட்டி:

தங்கவயலில் நகர பகுதி, சுரங்க குடியிருப்பு பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாட்டுடன் கொண்டாடினர். பல ஆண்டுகளாக விநாயகர் சிலைகள் கரைப்புக்கு ஒதுக்கப்பட்ட இடம், ராபர்ட்சன்பேட்டை அருகே உள்ள பாரண்டஹள்ளி ஏரி. இந்த ஏரியில் கழிவுநீர், சாக்கடை சேரும் இடமாக உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

சாக்கடை கழிவு நீரில் விநாயகர் சிலை கரைக்கும் போக்கு பக்தர்கள் மனதுக்கு வேதனை அளிக்கிறது. இங்கு மின் விளக்கு வசதியும் இல்லை.

எனவே, தங்கவயல் நகராட்சி ஆணையர், தாசில்தார் ஆகியோர் இணைந்து வருவாய்த்துறைக்கு சொந்தமான இடத்தில், விநாயகர் சிலை கரைப்புக்கென சுத்தமான குளம் அமைக்க வேண்டும். இவ்விஷயத்தில் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா கவனம் செலுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us