/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதல் ஜோடி குளத்தில் குதித்து சாவு?
/
கள்ளக்காதல் ஜோடி குளத்தில் குதித்து சாவு?
ADDED : ஆக 31, 2025 11:22 PM
சாம்ராஜ்நகர்: விவசாய குளத்தில், ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்கள் கள்ளக்காதலர்கள் என விசாரணையில் தெரிந்தது.
சாம்ராஜ்நகர் மாவட்டம், ஹனுார் தாலுகாவின், ஒடயர பாளையா கிராமத்தில் வசித்தவர் மீனாட்சி, 38. இவருக்கு திருமணமாகி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதே கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 40. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
ரவிக்கும், மீனாட்சிக்கும் அறிமுகம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவ்வப்போது ரகசியமாக சந்தித்து கொண்டதை, கிராமத்தினர் பார்த்துள்ளனர். இதனால் இருவரின் குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று காலை, கிராமத்தின் விவசாய குளம் ஒன்றில், ரவியும், மீனாட்சியும் இறந்து கிடந்தனர். இதை பார்த்த சிலர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஹனுார் போலீசார், இருவரின் உடல்களை மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர்.
'ரவியும், மீனாட்சியும் விவசாய குளத்தில் குதித்து, தற்கொலை செய்து கொண்டனரா அல்லது இவர்களை கொலை செய்து குளத்தில் வீசினரா என்பது, தற்போதைக்கு தெரியவில்லை. விசாரணை முடிந்த பின்னரே தெரியும்' என, போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.