தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கடவுள், புத்தகங்களை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி ஹரலுாரில் இருந்து வந்த 'தினமலர்' வாசகி உற்சாகம்

 கடவுள், புத்தகங்களை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி ஹரலுாரில் இருந்து வந்த 'தினமலர்' வாசகி உற்சாகம்

 கடவுள், புத்தகங்களை தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி ஹரலுாரில் இருந்து வந்த 'தினமலர்' வாசகி உற்சாகம்


ADDED : ஆக 01, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2026 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கடவுளையும், புத்தகங்களையும் குறிப்பிட்ட இடைவெளியில் தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி,'' என்று, 'கடல் தாமரை' புத்தக பூங்கா நுாலகத்திற்கு, ஹரலுாரில் இருந்து வந்திருந்த 'தினமலர்' வாசகி உற்சாகமாக கூறினார்.

பெங்களூரு சிவாஜிநகர் குயின்ஸ் சாலையில் உள்ள, 'தினமலர்' அலுவலகத்தின், 'கடல் தாமரை' புத்தக பூங்கா நுாலகத்திற்கு, ஹரலுார் கேட்டில் வசிக்கும் 'தினமலர்' வாசகிகள் சொர்ணம், குமுதவள்ளி நேற்று வந்தனர். நுாலகத்தில் இருந்த புத்தகங்களை ஆர்வமாக பார்த்தனர். ஆன்மிகம் தொடர்பான புத்தகங்களை படித்தனர்.

பின், சொர்ணம் கூறியதாவது:

எனது உறவினர் குமுதவள்ளியுடன் இங்கு வந்துள்ளேன். நான், 'தினமலர்' நாளிதழின், 40 ஆண்டு கால வாசகி. இங்கு நுாலகம் ஆரம்பிக்கப்பட்டது தெரிந்ததும், எனது மகனிடம் பல முறை இங்கு அழைத்து செல்லும்படி கூறினேன். வேலை காரணங்களால் அவரால் முடியவில்லை. சிவாஜிநகர் தண்டு மாரியம்மன் கோவிலுக்கு வந்தோம்.

'தினமலர்' அலுவலகம் இங்கு தான் உள்ளது என்று தெரிந்ததும், நுாலகத்திற்கு வந்து விட்டோம். நிறைய புத்தகங்கள் உள்ளன. நல்ல முயற்சி எடுத்துள்ளீர்கள். கடவுளையும், புத்தகங்களையும் குறிப்பிட்ட இடைவெளியில் தரிசனம் செய்ததில் மகிழ்ச்சி. எனது வீடு இங்கிருந்து 20 கி.மீ., துாரத்தில் உள்ளதால், அடிக்கடி இங்கு வந்து செல்வது கடினம். புத்தகங்களை வீட்டிற்கு கொண்டு சென்று படிக்க அனுமதி கொடுத்தா ல் பயனுள்ளதாக இருக்கும். அவசரமாக செல்வதால் இன்னும் நிறைய புத்தகங்களை படிக்க முடியவில்லை. இன்னொரு முறை இங்கு வரும் போது , நேரம் செலவழித்து புத்தகங்களை படித்து செல்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us