தண்ணீர் திறப்பால் அதிருப்தி காங்., – எம்.எல்.ஏ., மிரட்டல்
தண்ணீர் திறப்பால் அதிருப்தி காங்., – எம்.எல்.ஏ., மிரட்டல்
ADDED : நவ 18, 2026 01:21 AM

தாவணகெரே: பத்ரா அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், ெஹான்னாளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாந்தனகவுடா அதிருப்தியில் உள்ளார். அவர், தண்ணீர் திறப்பை நிறுத்தாவிட்டால், ராஜினாமா செய்வேன் என்று கூறியுள்ளார்.
சிக்கமகளூரின் தரிகெரே தாலுகா லக்கவள்ளி கிராமத்தில் பத்ரா அணை உள்ளது. இந்த அணையின் தண்ணீர் தான் தரிகெரே, கடூர், பத்ராவதி, தாவணகெரே, ஹரிஹரா, ஹொன்னாளி, சன்னகிரி உள்ளிட்ட 12 தாலுகாக்களின் குடிநீர், விவசாயத்திற்கு ஆதாரமாக உள்ளது.
1 டி.எம்.சி.,
நீர்பாசன ஆலோசனை குழு, மக்கள் பிரதிநிதிகள் கருத்துகளை கேட்காமல், அடுத்த 10 நாட்களுக்கு, பத்ரா அணையில் இருந்து ஒரு டி.எம்.சி., தண்ணீர் திறக்க, நேற்று முன்தினம் நீர்பாசன துறை அமைச்சர் செலுவராயசாமி உத்தரவிட்டார். இரவே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாவணகெரே டவுனில் உள்ள, அமைச்சர் மல்லிகார்ஜுன் வீட்டை முற்றுகையிட, நேற்று காலையில் விவசாயிகள் சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
யாரை கேட்டனர்
இந்நிலையில் ஹொன்னாளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாந்தனகவுடா நேற்று அளித்த பேட்டி:
எனது தொகுதியில் உள்ள விவசாய நிலங்களின் பயிர்கள், தண்ணீர் இன்றி கருக ஆரம்பித்துள்ளன. 20 நாட்களுக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். நீர்பாசன துறை அதிகாரிகள் கேட்கவில்லை. இப்போது அவசர, அவசரமாக தண்ணீர் திறந்துள்ளனர்.
யாரை கேட்டு தண்ணீர் திறந்தனர் என்று தெரியவில்லை. தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என, முதல்வரை சந்தித்து கோரிக்கை வைப்பேன். தண்ணீர் திறப்பை நிறுத்தாவிட்டால் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
