/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு
/
அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு
ADDED : அக் 16, 2025 07:29 AM
அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி உயர்வு
பெங்களூரு: மாநில அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக, டி.ஏ., எனும் அகவிலைப்படியை 2 சதவீதம் உயர்த்தி, அரசு அறிவித்துள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு, தன் ஊழியர்களுக்கான டி.ஏ.,வை மூன்று சதவீதம் உயர்த்தியது. 'இதுபோன்று, மாநில அரசு ஊழியர்களின் டி.ஏ.,வையும் மூன்று சதவீதம் உயர்த்த வேண்டும்' என, ஊழியர்கள் சங்க தலைவர் சடாக் ஷரி கோரியிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட முதல்வர் சித்தராமையா, 12.25 சதவீதமாக இருந்த டி.ஏ., 14.25 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டு உள்ளார். இந்த டி.ஏ., உத்தரவு, 2025 ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வரும். இதன் மூலம் லட்சக்கணக்கான ஊழியர்கள் மட்டுமின்றி, ஓய்வு பெற்ற ஊழியர்களும் பயனடைவர்.
முதல்வரின் அறிவிப்புக்கு, மாநில ஊழியர்கள் சங்க தலைவர் சடாக் ஷரி நன்றி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அதிகரித்த பின், மாநில அரசும் அகவிலைப்படியை திருத்துவது வழக்கமாகும்.