/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹெல்ப்லைன்' நம்பர் நினைவு உள்ளதா? பா.ஜ.,வுக்கு பிரியங்க் கார்கே கேள்வி!
/
'ஹெல்ப்லைன்' நம்பர் நினைவு உள்ளதா? பா.ஜ.,வுக்கு பிரியங்க் கார்கே கேள்வி!
'ஹெல்ப்லைன்' நம்பர் நினைவு உள்ளதா? பா.ஜ.,வுக்கு பிரியங்க் கார்கே கேள்வி!
'ஹெல்ப்லைன்' நம்பர் நினைவு உள்ளதா? பா.ஜ.,வுக்கு பிரியங்க் கார்கே கேள்வி!
ADDED : ஏப் 07, 2025 04:57 AM

பெங்களூரு : ''காங்கிரசால் தொல்லைக்கு ஆளானால் புகார் செய்ய, பா.ஜ., தொண்டர்களுக்காக உருவாக்கப்பட்ட ஹெல்ப்லைன் நம்பர் நினைவு உள்ளதா,'' என்று, அக்கட்சி தலைவர்களுக்கு, கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சாவு வீட்டில் அரசியல் செய்வது பா.ஜ.,வின் பேஷனாகி விட்டது. வினய் சோமய்யா தற்கொலை குறித்து விசாரணை நடக்கிறது. அதற்குள் பொய்யான தகவலை பரப்பி மக்களை திசை திருப்புகின்றனர். உத்தர கன்னடாவில் பரேஸ் மேத்தா, ஷிவமொக்காவில் ஹர்ஷா, பீதர் கான்ட்ராக்டர் சச்சின் இறந்த போதும் இப்படி தான் அரசியல் செய்தனர்.
வினய் சோமய்யா எழுதிய கடிதத்தில் எம்.எல்.ஏ.,க்கள் பொன்னண்ணா, மந்தர் கவுடா பெயர் குறிப்பிடப்பட்டு உள்ளதாக பா.ஜ.,வினர் கூறுகின்றனர். அந்த கடிதம் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டது. அதில் என்ன திருத்தம் வேண்டும் என்றாலும் செய்து இருக்கலாம்.
கான்ட்ராக்டர் சச்சின் தற்கொலை செய்த பின், அவரது வீட்டிற்கு சென்று அரசியல் செய்தனர். இப்போது அந்த வழக்கின் நிலை என்ன என்று யாராவது பார்த்தனரா?
சச்சின் வீட்டிற்கு யாராவது சென்று உதவி செய்கிறார்களா, காங்கிரசிடம் இருந்து பா.ஜ., தொண்டர்களை காப்பாற்ற போவதாக கூறி, பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா ஹெல்ப்லைன் நம்பரை துவக்கினார். இதுவரை எத்தனை பா.ஜ., தொண்டர்கள், ஹெல்ப்லைன் நம்பருக்கு அழைத்தனர் என்று சொல்லட்டும். அந்த நம்பர் பா.ஜ., தலைவர்களுக்கு நினைவு உள்ளதா.
கலபுரகியில் அரிசி திருட்டில் ஈடுபட்ட மணிகாந்தா ராத்தோடுக்கு, பா.ஜ., தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்தது. ஹனி டிராப் வழக்கை கர்நாடக போலீஸ் உதவியுடன், நாங்களும் விசாரிப்போம் என்று சி.பி.ஐ., அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.