தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பயங்கரவாதிகளுக்கு உதவிய மருத்துவர், ஏ.எஸ்.ஐ., கைது 

பயங்கரவாதிகளுக்கு உதவிய மருத்துவர், ஏ.எஸ்.ஐ., கைது 

பயங்கரவாதிகளுக்கு உதவிய மருத்துவர், ஏ.எஸ்.ஐ., கைது 


ADDED : ஜூலை 09, 2025 01:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 09, 2025 01:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு : லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளுக்கு உதவியதாக, பரப்பன அக்ரஹாரா சிறையின் மனநல மருத்துவர், ஏ.எஸ்.ஐ., பயங்கரவாதியின் தாய் என 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு ஆர்.டி.,நகர் சுல்தான்பாளையாவில் வாடகை வீட்டில் வசித்த, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் சையது சுகைல் கான், 24, முகமது உமர், 29, ஜாகித் தப்ரேஸ், 25, முதாசீர் பாஷா, 28, முகமது பைசல், 28 ஆகிய 5 பேரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின.

சதி திட்டம்


அதாவது பெங்களூரில் கடந்த 2008ல் நடந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் கைதாகி, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ள, கேரளாவின் நசீர் என்பவரின் கூட்டாளிகள் தான், இவர்கள் ஐந்து பேர் என்பது தெரிந்தது. நசீர் கூறியதால் பெங்களூரில் பல இடங்களில், குண்டுவெடிப்பை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு என்.ஐ.ஏ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிறையில் உள்ள நசீரை, காவலில் எடுத்து விசாரித்தனர்.

அப்போது இவர்களின் கூட்டாளிகளான ஜுனைத் அகமது, சல்மான் கானும், குண்டுவெடிப்பை அரங்கேற்ற திட்டம் தீட்டியதில், தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்கள் இருவரும் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளனர். இதையடுத்து 8 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வாக்கி டாக்கி


இந்நிலையில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் தொடர்ந்து நடத்திய விசாரணையில், பரப்பன அக்ரஹாரா சிறையின் மனநல மருத்துவர் நாகராஜ், சிறை ஏ.எஸ்.ஐ., ஷான் பாஷா, ஜுனைத் அகமது தாய் அனீஸ் பாத்திமா ஆகியோருக்கும், குண்டுவெடிப்பை அரங்கேற்ற சதி திட்டம் தீட்டியதில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. சிறையில் இருக்கும் நசீருக்கு, மனநல மருத்துவர் நாகராஜ் மொபைல் போன், கொடுத்து பேச உதவி உள்ளார்.

நசீரை விசாரணைக்கு அழைத்து செல்லும் போது, அவரிடம் பணம் வாங்கி கொண்டு, ஷான் பாஷா ஆதரவாக செயல்பட்டதும் தெரிந்தது. இதையடுத்து நேற்று பெங்களூரு, கோலாரில் ஐந்து இடங்களில் சோதனை நடத்திய என்.ஐ.ஏ., அதிகாரிகள், நாகராஜ், ஷான் பாஷா, அனீஸ் பாத்திமாவை கைது செய்தனர். இரண்டு வாக்கி டாக்கிகள் உட்பட மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நாகராஜ் தோழி பவித்ரா என்பவரை, அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us