sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தங்கவயல் எஸ்.பி., மற்றும் குடும்பத்தினர் மீது... வரதட்சணை வழக்கு!

/

தங்கவயல் எஸ்.பி., மற்றும் குடும்பத்தினர் மீது... வரதட்சணை வழக்கு!

தங்கவயல் எஸ்.பி., மற்றும் குடும்பத்தினர் மீது... வரதட்சணை வழக்கு!

தங்கவயல் எஸ்.பி., மற்றும் குடும்பத்தினர் மீது... வரதட்சணை வழக்கு!


ADDED : அக் 20, 2025 06:54 AM

Google News

ADDED : அக் 20, 2025 06:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கர்நாடகாவில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் தங்க வயலில் எஸ்.பி.,யாக இருப்பவர் ஷிவன்ஷு ராஜ்புத், 35. இவர் 2019ம் ஆண்டு ஐ.பி.எஸ்., குழுவை சேர்ந்தவர். இவரது சொந்த ஊர், உத்தர பிரதேசம் மாநிலம், நொய்டா. கடந்த 2021ல் ஷிவன்ஷு ராஜ்புத்திற்கும், டாக்டரான கிருதி சிங்கிற்கும் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் மகன் உள்ளார்.

புகார் இந்நிலையில், கடந்த 16ம் தேதி நொய்டா செக்டார் 126 போலீஸ் நிலையத்தில், கிருதி சிங் அளித்த புகார்:

எனக்கும், கர்நாடகாவில் ஐ.பி.எஸ்., அதிகாரியாக பணியாற்றும் ஷிவன்ஷு ராஜ்புத்திற்கும் 2021ல் திருமணம் நடந்தது. திருமணத்திற்காக எனது குடும்பத்தினர் 1.40 கோடி ரூபாய் செலவிட்டனர். இதில் விலை உயர்ந்த பரிசுகள், நகைகள், 20 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கும்.

திருமணத்திற்கு பின், எனது கணவர் ஷிவன்ஷு ராஜ்புத், மாமனார் ராம் காஷ் ராஜ்புத், மாமியார் ஆஷா ராஜ்புத், மைத்துனர் ஹிமான்ஷு ராஜ்புத், அவரது மனைவி ரீனா சிங், எனது கணவரின் நண்பர்கள் துஷார் ஸ்ரீவத்சவா, விபோர் ஸ்ரீவத்சவா ஆகியோர் கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி எனக்கு தொல்லை கொடுத்தனர். 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான கார் வாங்கி தரும்படி எனது தந்தையை வற்புறுத்தினர். வரதட்சணை வாங்கி வர மறுத்ததால் மன, உடல்ரீதியாக தொல்லை கொடுத்தனர். எனது நிறத்தை கூறி ஆபாசமாக திட்டினர்.

சட்டவிரோத உறவு நான் ஐ.பி.எஸ்., அதிகாரி. என்னை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று, ஷிவன்ஷு ராஜ்புத் கூறினார். கான்பூரில் நிலம் வாங்க 40 லட்சம் ரூபாய் கேட்டனர். பணம் கொடுக்க மறுத்தால், உன் வாழ்க்கையை அழித்து விடுவேன் என்று மிரட்டினர். எனது நகைகளை மாமியார் பறித்து கொண்டார். என் கணவருக்கு, சட்டவிரோத உறவுகள் உள்ளது.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், பி.என்.எஸ்., பிரிவுகள் 85 (கணவர் அல்லது கணவர் உறவினர்கள் கொடுமை), 115(2) (தற்கொலை முயற்சி அல்லது தற்கொலைக்கு துாண்டும் வகையில் கொடுமைப்படுத்துவது), 351(2) (உயிருக்கு அச்சுறுத்தல்), 352 (காயப்படுத்துதல்), 3(5) (குற்றவியல் சதி), 316(2) (நம்பிக்கை மீறல்), வரதட்சணை தடை சட்டம் பிரிவு 3, 4 (வரதட்சணை கேட்பது மற்றும் வாங்குவது) ஆகிய பிரிவுகளில், ஷிவன்ஷு ராஜ்புத் உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.

இந்த வழக்கு குறித்து, ஷிவன்ஷு ராஜ்புத் கூறியதாவது:

திருமணம் ஆனதில் இருந்து மனைவி கிருதி சிங், அவரது குடும்பத்தினரால் தொடர்ச்சியான துன்புறுத்தல்களை அனுபவித்து வருகிறேன். எங்களிடையே ஏற்பட்ட பிரச்னையை தீர்க்கும் முயற்சியால், இரு குடும்பமும், 2023 டிசம்பர் 31ல் பெங்களூரில் சந்தித்து சமாதானம் பேசினோம். ஆனாலும், அதன்பின் நிறைய சண்டை ஏற்பட்டது.

எனது பதவியை பயன்படுத்தி, வருமானத்தை அதிகரிக்க எனக்கு அழுத்தம் கொடுத்தனர். நான் மறுத்ததால் எனக்கு பல வழிகளில் தொல்லை கொடுத்தனர். எனது பெங்களூரு வீட்டில் மனைவியின் சகோதரரும், அவரது மனைவியும் வசித்தனர். 2024 செப்டம்பர் 14ல் கிருதி சிங்கும், அவரது தாயும் சேர்ந்து என்னை தாக்கினர். எனது மொபைல் போனை சேதப்படுத்தினர். இதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது.

விவாகரத்து மனு பின், இரு குடும்பமும் பேசி பரஸ்பரம் பிரிவது என்று முடிவு செய்யப்பட்டது. கான்பூர் நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு மனு செய்து உள்ளோம். வழக்கு விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை. என் மீதும், குடும்பத்தினர் மீதும் பதிவான வழக்கை சட்டப்படி சந்திப்போம்.

என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக, நான் அளித்த புகாரில் கிருதி சிங், அவரது குடும்பத்தினர் மீது பெங்களூரில் வழக்கு பதிவாகி உள்ளது. அவர்கள் என்னை அவமானப்படுத்த நினைக்கின்றனர். விவாகரத்திற்கு பின், மகனை இருவரும் பராமரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்தோம்.

முதலில் ஒப்பு கொண்ட கிருதி சிங், தற்போது மாறி விட்டார். என் மீதான குற்றச்சாட்டை அவர் நிரூபித்தால், எனது ஐ.பி.எஸ்., பதவியை ராஜினாமா செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us