தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வரதட்சணை கொடுமை வழக்கு குறைவு: டி.ஜி.பி., சலீம் தகவல்

வரதட்சணை கொடுமை வழக்கு குறைவு: டி.ஜி.பி., சலீம் தகவல்

வரதட்சணை கொடுமை வழக்கு குறைவு: டி.ஜி.பி., சலீம் தகவல்


ADDED : ஆக 11, 2025 04:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 11, 2025 04:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் வரதட்சணை கொடுமை வழக்குகள், கணிசமாக குறைந்துள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிட்டால், தற்போது 30 சதவீதம் குறைந்துள்ளது.

இது குறித்து, மாநில போலீஸ் டி.ஜி.பி., சலீம் வெளியிட்ட அறிக்கை:

கர்நாடகாவில் இதற்கு முன் வரதட்சணை கொடுமையால் இறப்புகள் அதிகம் இருந்தன. இது சில ஆண்டுகளாக படிப்படியாக குறைந்து வருகிறது. 2023ம் ஆண்டில், 158 பேர் வரதட்சணை கொடுமையால் இறந்தனர். இந்த எண்ணிக்கை 2024ம் ஆண்டில், 112 ஆக குறைந்தது. 30 சதவீதம் வழக்குகள் குறைந்துள்ளன.

நடப்பாண்டு முதல் ஐந்து மாதங்களில், 48 வரதட்சணை இறப்புகள் நடந்துள்ளன. போலீஸ் துறையின் கடும் நடவடிக்கைகளால், சம்பவங்கள் குறைகின்றன. இது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். சட்டத்தை பற்றிய பயத்தை ஏற்படுத்துகிறோம்.

வரதட்சணைக்காக கொடுமைப்படுத்தி, பெண்ணின் இறப்புக்கு காரணமானால், தண்டனை உறுதி என்பதை உணர்த்தி உள்ளோம். இது போன்ற வழக்குகளின் விசாரணையை 60 நாட்களில் முடிக்கிறோம். குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க செய்கிறோம். இதனால் வழக்குகள் எண்ணிக்கை குறைந்துள்ளது.

வரதட்சணை கொடுமையால் ஏற்படும் இறப்புகள் எண்ணிக்கை குறைவதற்கு, பெண்கள் தைரியமாக முன் வந்து புகார் அளிப்பதும், முக்கிய காரணமாகும். கணவர் வீட்டினரால் வரதட்சணை துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், போலீசாரை தொடர்பு கொண்டு புகார் அளிக்கின்றனர். எனவே போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்கின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us