தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/வினோ மன்கட் டிராபி கிரிக்கெட் போட்டி கர்நாடக அணிக்கு டிராவிட் மகன் கேப்டன்

வினோ மன்கட் டிராபி கிரிக்கெட் போட்டி கர்நாடக அணிக்கு டிராவிட் மகன் கேப்டன்

வினோ மன்கட் டிராபி கிரிக்கெட் போட்டி கர்நாடக அணிக்கு டிராவிட் மகன் கேப்டன்


UPDATED : அக் 02, 2026 12:00 AM

ADDED : அக் 01, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 02, 2026 12:00 AM ADDED : அக் 01, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

– நமது நிருபர் –

வி னோ மன்கட் டிராபி கிரிக்கெட் போட்டிக்காக, கர்நாடக அணி கேப்டனாக, அன்வய் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் வினோ மன்கட் நினைவாக, ஆண்டிற்கு ஒரு முறை, வினோ மன்கட் டிராபி என்ற பெயரில், கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன.

பி.சி.சி.ஐ., கீழ் அங்கீகரிக்கப்பட்ட பல மாநில கிரிக்கெட் சங்கங்களின் ஜூனியர் அணிகள் பங்கேற்கின்றன. குறிப்பாக, 19 வயதுக்கு உட்பட்டோருக்காக இந்த கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

இதில் தங்கள் திறமையை நிரூபிக்கும் வீரர்கள், இந்திய கிரிக்கெட் அணிக்கும் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இந்த ஆண்டிற்கான வினோ மன்கட் டிராபி, வரும் 8ம் தேதி துவங்கி, 16ம் தேதி வரை பல நகரங்களில் நடக்கிறது.

இதில் பங்கேற்கும் கர்நாடக அணியின் கேப்டனாக அன்வய் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், பயிற்சியாளர் டிராவிட்டின் மகன் ஆவார்.

இதுபோல, மைசூரு மண்டலத்தில் இருந்து வருண் படேல், சமர்த் எம்.குல்கர்னி ஆகியோரும், கர்நாடக அணிக்கு தேர்வாகி உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us