ADDED : ஏப் 10, 2026 04:18 AM

கெட்ட பெயர் ஏற்படுத்த முயற்சி பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங் அளித்த பேட்டி:
வீடியோவில் இருந்த நபரை, எங்கள் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது ரத்த மாதிரியில், எந்த விதமான போதைப்பொருளும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர் பெங்களூரை சேர்ந்தவர் அல்ல. வெளியில் இருந்து வந்தவர்.
அவருக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளது. சில மருந்துகளை சாப்பிட்டுள்ளார். அத்துடன் சிறிதளவு மதுபானமும் அருந்தியுள்ளார். மருந்தின் பின் விளைவுகள் மற்றும் குடிபோதையால் அவரது சுய நினைவை இழந்து, விசித்திரமாக நடந்து கொண்டாரே தவிர, அதற்கும் போதைப்பொருளுக்கும் சம்பந்தம் இல்லை.
ஏதோ ஒரு வீடியோவை, சமூக வலைதளத்தில் அப்லோடு செய்வதற்கு முன், அதன் நம்பகத்தன்மையை பரிசீலிக்க வேண்டும். வீடியோவை பரப்புவது சரியல்ல. பெங்களூரு நகரின் கவுரவத்துக்கும், தனிப்பட்ட நபருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் விதமாக, வீடியோவை முதலில் வெளியிட்ட நபரை கண்டுபிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஷேர் செய்தவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்புவோம்.
போதைப்பொருள் பயன்படுத்துவது தெரிந்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதை விட்டு விட்டு தேவையின்றி அவப்பிரசாரம் செய்து, மக்களுக்கு பயத்தை ஏற்படுத்த கூடாது. பெங்களூரில் ஜாம்பி என்ற அபாயமான போதைப்பொருள் இல்லை. மக்கள் பீதியடைய வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
