sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 08, 2025 ,கார்த்திகை 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

3 ஆண்டில் கர்நாடகாவில் பறிமுதலான போதை பொருட்கள்...  19,500 கிலோ! 10 நாடுகளில் இருந்து கடத்தி வருவதாக போலீசார் அதிர்ச்சி தகவல்

/

3 ஆண்டில் கர்நாடகாவில் பறிமுதலான போதை பொருட்கள்...  19,500 கிலோ! 10 நாடுகளில் இருந்து கடத்தி வருவதாக போலீசார் அதிர்ச்சி தகவல்

3 ஆண்டில் கர்நாடகாவில் பறிமுதலான போதை பொருட்கள்...  19,500 கிலோ! 10 நாடுகளில் இருந்து கடத்தி வருவதாக போலீசார் அதிர்ச்சி தகவல்

3 ஆண்டில் கர்நாடகாவில் பறிமுதலான போதை பொருட்கள்...  19,500 கிலோ! 10 நாடுகளில் இருந்து கடத்தி வருவதாக போலீசார் அதிர்ச்சி தகவல்


ADDED : டிச 08, 2025 05:04 AM

Google News

ADDED : டிச 08, 2025 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 10 ஆண்டுகளாக, கர்நாடகாவில் போதைப் பொருள் விற்பனை அதிகரிக்கிறது. போதைப் பொருள் மாபியாவினர், கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள், ஐ.டி., நிறுவனங்களின் ஊழியர்களை குறி வைக்கின்றனர். போலீசாரின் கண்களை மறைத்து, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள், கர்நாடகாவுக்குள் நுழைகின்றன. இளம் சமுதாயத்தினரின் எதிர்காலத்தை பாழாக்கின்றன.

ஐ.டி., தொழில்நுட்பத்தில் கர்நாடகா, உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ளது. மருத்துவம், கல்வி, வர்த்தகத்திலும் கூட, இம்மாநிலம் முன்னணியில் உள்ளது. ஆனால் போதைப் பொருள் மாபியாவினரால், மாநிலத்துக்கு களங்கம் ஏற்படுகிறது.

குற்றவாளிகள் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக்க, மாநில அரசு உறுதி பூண்டுள்ளது. ஆங்காங்கே சோதனை நடத்தி, கிலோ கணக்கில் கஞ்சா, போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, குற்றவாளிகளை கைது செய்கின்றனர். ஆனாலும், இதை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.

இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மூன்று ஆண்டுகளில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள, 19,500 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 15,000 வழக்குகள் பதிவாகியுள்ளன. வெளிநாட்டவர் உட்பட 19,000 பேர் கைது செய்யப்பட்டனர்.

போதைப் பொருட்களை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநில அளவில், 'போதைப் பொருள் தடுப்பு செயற்படை' அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் போதைப் பொருளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். போதைப் பொருள் விற்ற வெளிநாட்டினர், 300 பேர் நாடு கடத்தப்பட்டனர்.

ஆப்கன், பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள், மியான்மர், தாய்லாந்து உட்பட 10 நாடுகளில் இருந்து போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு இங்கு வருகின்றன. அதேபோன்று, அசாம், திரிபுரா, ஒடிஷா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும், பெருமளவில் போதைப் பொருட்கள் கர்நாடகாவுக்கு வருகின்றன.

ஹோட்டலில் பணியாற்றுவோர், கட்டுமான தொழிலாளர்களை பணத்தாசை காட்டி, போதை மாபியாவினர் பயன்படுத்துகின்றனர். பஸ்கள், ரயில்களில் தொழிலாளர்கள் மூலமாக, போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர்.

பெங்களூரில் பதுக்கி வைத்து விற்கின்றனர். போதைப் பொருட்களை முழுமையாக கட்டுப்படுத்துவோம். பஸ், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளோம் .

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, பெங்களூரு நகர போலீசார், 'பெடரேஷன் ஆப் ஹிஸ்டாரிக் வெஹிக்கிள் ஆப் இந்தியா' ஒருங்கிணைப்பில், போதைப் பொருள் இல்லா கர்நாடகாவுக்காக, பழங்கால கார்களின் ஊர்வலம், பெங்களூரில் நேற்று நடந்தது. இதை உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் துவக்கி வைத்தார்.

அவர் பேசியதாவது:

கர்நாடகாவை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக்க, உறுதி பூண்டுள்ளோம். போதை பொருட்களை விற்போர், பயன்படுத்துவோரை முழுதுமாக கட்டுப்படுத்தும் வரை அரசும், போலீஸ் துறையும் உறங்காது.

போதைப் பொருட்களை விற்போர் மனிதர்களே அல்ல. இதன் மூலம் மக்களின் வாழ்க்கையோடு விளையாடுகின்றனர். அவர்களின் எதிர்காலம் மற்றும் ஆரோக்கியத்தை பாழாக்குகின்றனர்.

இதை தீவிரமாக கருதிய எங்கள் அரசு, போதைப் பொருட்களுக்கு எதிரான போராட்டத்தை நடத்துகிறது. அரசும், போலீசாரும் இணைந்து யுத்தம் நடத்துகின்றனர். வெளிநாடுகளில் இருந்து கல்விக்காக வருவோர், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவது துரதிர்ஷ்டவசமாகும்.

பள்ளி சிறார்கள் போதைப்பொருள் மாபியாவினர், சிறார்களையும் விட்டு வைக்கவில்லை. பள்ளிகளுக்கு சென்று சிறார்களுக்கு, போதைப்பொருள் கலந்த சாக்லேட்களை இலவசமாக கொடுத்து, அவர்களை போதைக்கு அடிமையாக்குகின்றனர்.

இதை கட்டுப்படுத்தும் வரை, ஓயமாட்டோம். மாணவர்கள், ஐ.டி., ஊழியர்கள் உட்பட இளம் சமுதாயத்தினர், போதைப் பழக்கத்தின் தீமைகளை உணர்ந்து, அதில் இருந்து விலகி இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us