sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அசாம் வாலிபர் கைது

/

 ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அசாம் வாலிபர் கைது

 ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அசாம் வாலிபர் கைது

 ரூ.1 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அசாம் வாலிபர் கைது


ADDED : பிப் 27, 2026 05:27 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எலக்ட்ரானிக் சிட்டி: போதை பொருள் விற்பனை வழக்கில் அசாம் வாலிபரை, கேரள மாநில போலீசார் பெங்களூரில் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள, எம்.டி.எம்.ஏ., பறிமுதல் செய்யப்பட்டது.

கேரளாவின் மலப்புரம் போலீசார், எம்.டி.எம்.ஏ., என்ற போதை பொருள் விற்ற எட்டு பேர் கும்பலை, கடந்த வாரம் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், தங்களுக்கு போதை பொருள் சப்ளை செய்யும், அசாம் மாநி லத்தின் தீரேஷ் குதும் , 27, பெங்களூரில் வசிப்பது பற்றி கூறியிருந்தனர்.

இந்த தகவலின்படி, நேற்று முன்தினம் பெங்களூரு வந்த கேரள போலீசார், எலக்ட்ரானிக் சிட்டி மைலசந்திராவில், வாடகை வீட்டில் வசித்த தீரேஷ் குதுமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டு கிலோ எம்.டி.எம்.ஏ., பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பரபரப்பு தகவல் வெளியாகின.

அதாவது, தீரேஷ் குதுமின் சகோதரி நைஜீரிய வாலிபரை காதலித்து திருமணம் செய்தவர். அவர்கள் இருவரும் அசாமில் வசிக்கின்றனர். டார்க்வெப் இணையம் மூலம் போதை பொருட்களை ஆர்டர் செய்து, நைஜீரியாவில் இருந்து வரவழைத்து உள்ளனர். அசாமில் இருந்து பார்சல் மூலம் பெங்களூரு மற்றும் கேரளாவுக்கும் அனுப்பி உள்ளனர்.

தீரேஷ் உட்பட கைதான ஒன்பது பேரும், உணவு விற்பனை பிரதிநிதிகள் அணியும் டி ஷர்ட்டுகளை அணிந்து, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு உள்ளனர். குழந்தைகளுக்கான பால் பவுடரான செர்லாக்கிற்குள் மறைத்து வைத்து, வாடிக்கையாளர்களுக்கு போதை பொருட்களை எடுத்து சென்றதும் தெரியவந்து உள்ளது. இந்த வலையமைப்பில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us