/
ஸ்பெஷல்
/
பானுவாசர ஸ்பெஷல்
/
சிறுதானியம் ஐஸ்கிரீம் தயாரித்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாத்தியம்
/
சிறுதானியம் ஐஸ்கிரீம் தயாரித்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாத்தியம்
சிறுதானியம் ஐஸ்கிரீம் தயாரித்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாத்தியம்
சிறுதானியம் ஐஸ்கிரீம் தயாரித்து மாதம் ரூ.2 லட்சம் சம்பாத்தியம்
ADDED : செப் 28, 2025 06:35 AM

ஐஸ்கிரீம் என்று பெற்றோரிடம் கேட்டால், காய்ச்சல் வந்துவிடும் வேண்டாம் என்று கூறிவிடுவர். ஆனால், பெங்களூரை சேர்ந்தவர் தயாரிக்கும் சிறுதானிய ஐஸ்கிரீமை, குழந்தைகளுக்கு பெற்றோர் விரும்பி வாங்கி கொடுக்கின்றனர்.
ஷிவமொக்காவை சேர்ந்தவர் கவுதம் ராய்கர், 43. பெங்களூரில் பொறியியல் பட்டம் பெற்ற இவருக்கு, தொழில்நுட்ப துறையில் சேர விரும்பவில்லை. ஆனாலும் சில ஆண்டுகள் பணியாற்றி வந்தவரின் எண்ணம் எல்லாம், தொழில் முனைவோராக வேண்டும் என்பதே.
அதில் சாதித்த அவர் கூறியதாவது:
எங்கள் குடும்பத்தின் எலக்ட்ரானிக் பொருட்கள் வினியோகத்தை கவனித்து வந்தேன். ஆனால், அதில் எனக்கு ஏனோ விருப்பமில்லை. மக்கள், தங்களின் வேர்களுடன் இணைத்து, அர்த்தமுள்ள ஒன்றை உருவாக்கவும், அதே நேரத்தில் சுகாதார நன்மைகள் இருக்க வேண்டும் என விரும்பினேன்.
சிறியவர் முதல் பெரியவர் தினையில் அளவுக்கு அதிகமாகவே ஊட்டச்சத்து உள்ளன. ஆனால் அவை காலப்போக்கில் அன்றாட உணவு வகைகளில் இருந்து மறைந்து விட்டன.
அனைவரும் விரும்பும் வகையில் உணவை அறிமுகப்படுத்தக்கூடாது என்று எண்ணியபோது, ஐஸ்கிரீம் மூலம் அதை நிவர்த்தி செய்யும் யோசனை தோன்றியது. ஐஸ்கிரீமை விட சிறந்தது எதுவும் இல்லை. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுகின்றனர்.
என் பணியை விட்டு விலகி, மல்லேஸ்வரத்தில் 2018ல் சிறுதானியங்களில் செய்யப்பட்ட ரொட்டிகள், ரஸ்குகள் விற்கும் கடையை துவக்கினேன். இதற்கு பொது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதன்பின், 2020 ல் பால் இல்லாமல், ஊட்டச்சத்து நிறைந்த ஐஸ்கிரீம் தயாரித்தேன். இதுவும் நல்ல வரவேற்பை பெற்றது. பெற்றோர் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு சிறுதானிய ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்தனர்.
தினைகளில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் பிற அத்தியாவசிய தாதுக்கள் நிறைய உள்ளன. ஆனால் குழந்தைகளோ தினையின் சுவையை விரும்புவதில்லை. எனவே அவர்களுக்கு பிடித்தமான ஐஸ்கிரீமில் அதை செய்ய தர தீர்மானித்தேன்.
எங்களுக்கு மிகவும் சவாலாக இருந்தது, தினை பால் தான். பசுவின் பாலைவிட, தினை பாலில் அதிக துகள்கள் இருக்கும். ஊட்டச்சத்தில் குறையில்லாமல், அதை வடிகட்டுவது என்பது பெரிய சவாலாக உள்ளது.
புதிய இயந்திரம் அப்போது தான் என் பொறியியல் படிப்பு திறமையை காட்டி, துகள்களை வடிகட்டும் இயந்திரம் கண்டுபிடித்தேன். உள்ளூர் விவசாயிகள் இடம் இருந்து சிறு தானியங்களை வாங்கி, நன்றாக கழுவி, துகள்களை அகற்றி உலர்த்தி, அதில் இருந்து பால் எடுத்து ஐஸ்கிரீம் தயாரித்தேன்.
பின், 2023 ல் 'லிகி புட்ஸ்' என்ற பெயரில் ஐஸ்கிரீம் மட்டுமின்றி, சிறுதானிய காபி, ஸ்மூதீஸ், ஷேக்ஸ், சஸ்க்ஸ், குக்கீஸ், சாண்ட்விச், பாஸ்தா என பல வகைகள் தயாரிக்கப்பட்டது. இவைகள் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -