ADDED : அக் 11, 2025 11:06 PM
விஜயபுரா: விஜயபுரா மாவட்டத்தின், பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதியடைந்தனர்.
விஜயபுரா மாவட்டம், திக்கோடாவின் ஹொன்னாடகி, கவலகி, கக்கோடா, மதபாவி, தாபேரி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று முன் தினம், இரவு 10:00 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்குள் இருந்து பெரும் சத்தம் கேட்டது.
பொருட்கள் சிதறி விழுந்தன. மக்கள் பயந்து அலறிக் கொண்டு, வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.
சுரங்கம், நில ஆய்வியல் துறை அதிகாரிகள், நிலநடுக்கம் உணரப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். மக்களுக்கு தைரியம் கூறினர்.
நில நடுக்கத்தின் அளவு 2.8 ரிக்டராக பதிவாகியுள்ளதாக இயற்கை பேரிடர் கண்காணிப்பு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம், விஜயபுரா சிந்தகியின் பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இப்போது மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் கிலி அடைந்துள்ளனர். வீட்டுக்குள் செல்ல பயந்து, இரவு முழுவதும் வெளியே இருந்தனர்.