சனிக்கிழமைகளில் 'நோ பேக் டே' கட்டாயம் என கல்வித்துறை உத்தர வு
சனிக்கிழமைகளில் 'நோ பேக் டே' கட்டாயம் என கல்வித்துறை உத்தர வு
ADDED : ஜூன் 18, 2026 10:27 PM
பெங்களூரு: சிறார்களின் புத்தக சுமையை குறைக்க, கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பள்ளிகளிலும், வாரந்தோறும் சனிக்கிழமை 'நோ பேக் டே' கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
பள்ளி சிறார்களின் சுமையை குறைக்கவும், சிரித்தபடி பாடம் கற்கும் சூழ்நிலையை உருவாக்கும் நோக்கில், அந்தந்த ஆண்டுகளில், வாரந்தோறும் சனிக்கிழமை அன்று, பள்ளிகளில், 'நோ பேக் டே' எனும் பள்ளிப்பை எடுத்து வராத மரபு பின்பற்றப்படுகிறது.
மாநிலத்தின் அனைத்து அரசு பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் தொடக்க, உயர் நிலை பள்ளிகளுக்கு இந்த உத்தரவு பொருந்தும். அன்றைய தினம், மாணவர்கள் புத்தக சுமை இல்லாமல், வெறுங்கையோடு பள்ளிக்கு வரலாம். புத்தக படிப்பில் மட்டுமின்றி, பாடங்கள் சாராத விஷயங்களிலும், திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
நோ பேக் டேநாளன்று, மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து, சாலை பாதுகாப்பு, கைவினை பொருட்கள் தயாரிப்பது, ஓவியக்கலை, யோகா, பிடித்தமான விளை யாட்டுகளில் ஈடுபடலாம்.
வாரம் முழுதும், பாட அழுத்தத்தில் உள்ள சிறார்களுக்கு, நோ பேக் டேநிம்மதியை அளிக்கும். படிப்பில் ஆர்வத்தை அதிகரிக்கவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
