sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 கொடி கம்பத்தில் மாணவர்களை ஏற்ற கூடாது; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

/

 கொடி கம்பத்தில் மாணவர்களை ஏற்ற கூடாது; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

 கொடி கம்பத்தில் மாணவர்களை ஏற்ற கூடாது; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு

 கொடி கம்பத்தில் மாணவர்களை ஏற்ற கூடாது; பள்ளிகளுக்கு கல்வித்துறை உத்தரவு


ADDED : ஜன 26, 2026 04:50 AM

Google News

ADDED : ஜன 26, 2026 04:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: 'குடியரசு தினம் கொடியேற்ற நிகழ்ச்சியில், மாணவர்களை கொடி கம்பத்தில் ஏற்றக்கூடாது' என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, கல்வித்துறை பிறப்பித்த உத்தரவு:

முந்தைய ஆண்டுகளில், குடியரசு தின கொடியேற்றத்தின் போது, கம்பத்தில் கொடி சிக்கிக்கொண்டதால் அதை சரி செய்ய மாணவர்கள் ஏறிய போது, தவறி விழுந்து அசம்பாவிதம் ஏற்பட்டது. மின்சாரம் தாக்கி உயிரிழந்த உதாரணங்களும் உள்ளன. இதை தடுக்கும் நோக்கில், கல்வித்துறை இந்த சுற்றறிக்கையை வெளியிடுகிறது.

இன்று குடியரசு தினத்தை முன்னிட்டு, பள்ளிகளில் மாணவர்கள் அணிவகுப்பு, கலை நிகழ்ச்சிகள் நடக்கும் போது, அரசு பிறப்பித்த விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தின் சுற்றுப்பகுதிகளில், மின் இணைப்புகளில் அசம்பாவிதம் ஏற்படாமல் கண்காணிக்க வேண்டும்.

நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்து செல்லும், அழைத்து வரும் வாகனங்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும். ஓட்டுநர் மதுபானம் அருந்தவில்லை என்பதை, உறுதிப்படுத்த வேண்டும். வாகனங்களின் வேகத்தையும் கண்காணிக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து, குறைந்தபட்சம் 100 மீட்டர் தொலைவில், வாகனங்களை நிறுத்த வேண்டும்.

அவசர சூழ்நிலையை எதிர்கொள்ள, மாணவ - மாணவியருக்கு தேவையான பயிற்சி அளிக்க வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிகழ் ச்சி குறித்து முன்கூட்டியே உள்ளாட்சிகள், போலீஸ் துறை, தீயணைப்பு, மருத்துவ சேவை துறைகளுக்கு தகவல் தெரிவிப்பது அவசியம்.

குடியரசு தின நிகழ்ச்சிகளில், மாணவ - மாணவியருக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும். நிகழ்ச்சி நிர்வகிப்புக்கு, பள்ளி மேம்பாட்டு கமிட்டி உறுப்பினர்களை பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us