ADDED : மே 24, 2026 12:14 AM
பெலகாவி: தற்போது நாட்டில், எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்துவது மட்டுமே, ஒரே தீர்வாகும். எனவே, எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தும்படி, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை கூறியுள்ளார். இதை பலரும் கடைபிடிக்கின்றனர்.
பொதுமக்கள் சொந்த வாகனத்தை தவிர்த்து விட்டு, அரசு பஸ்கள், மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர். சில அதிகாரிகள், ஊழியர்களும் கார் பயன்படுத்துவதில்லை.
இயற்கை சூழலை பாதுகாக்கவும், எரிபொருளின் முக்கியத்துவம் குறித்து, பிரதமரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட கர்நாடகாவின் உயர் அதிகாரியான சீதாராமு, தனக்கு அரசு அளித்த காரை மறுத்துவிட்டு, தினமும் சைக்கிளில் அலுவலகம் வருகிறார்.
பெலகாவி மாவட்டம், சிக்கோடியின் மாவட்ட கல்வித்துறை அதிகாரியாக பணியாற்றுபவர் இவர், தினமும் அலுவலகம் வந்து செல்ல, அரசு சார்பில் கார் வழங்கப்பட்டு உள்ளது.
காருக்கான எரிபொருள் செலவையும், அரசே ஏற்றுள்ளது. சில நாட்களாக, கார் வேண்டாம் என, மறுத்து விட்டு தினமும் சீதாராமு சைக்கிளில் அலுவலகம் வருகிறார். இது, மற்ற அதிகாரிகளுக்கு, முன்னுதாரணமாக உள்ளது.
