/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பணி நேரத்தில் ஆசிரியர்களை வெளியே அனுப்ப... தடை! பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் கண்டிப்பு
/
பணி நேரத்தில் ஆசிரியர்களை வெளியே அனுப்ப... தடை! பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் கண்டிப்பு
பணி நேரத்தில் ஆசிரியர்களை வெளியே அனுப்ப... தடை! பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் கண்டிப்பு
பணி நேரத்தில் ஆசிரியர்களை வெளியே அனுப்ப... தடை! பள்ளிகளுக்கு கல்வித்துறை அதிகாரிகள் கண்டிப்பு
ADDED : ஜூலை 02, 2025 07:30 AM

கர்நாடக அரசு பள்ளிகளில் பணியாற்றும் முதல்வர், ஆசிரியர்கள் சிலர், பணி நேரத்தில் வகுப்பு எடுக்காமல், பள்ளி தொடர்பான வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.
எனவே, பள்ளி நேரத்தில் முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாடம் சொல்லித்தர வேண்டுமே தவிர, வேறு பணிகளில் அவர்களை நியமிக்க கூடாது என்று கல்வி துறைக்கு பல பெற்றோரிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன.
இதை பரிசீலித்த கல்வி துறையும், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட நிர்வாகம், மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
ஆர்.டி.இ., எனும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ், பள்ளி நேரத்தில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் நடத்த வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்த பள்ளி நேரத்தில், ஆசிரியர்களும், முதல்வரும் அங்கிருப்பது அவசியம்
பள்ளி முதல்வரும், ஆசிரியர்களும் எந்தவித நிகழ்ச்சிகள், பயிற்சி பட்டறைகள், ஆலோசனை கூட்டம் உட்பட மற்ற நடவடிக்கைகளில் பணியாற்ற, மாவட்ட கலெக்டர்களோ, மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அதிகாரிகளோ வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கக் கூடாது
பள்ளி நேரத்தில், முதல்வர், ஆசிரியர்களுடன் கலெக்டர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை கூட்டம் நடத்தக் கூடாது. ஆய்வுக்கு செல்லும் கல்வி துறை அதிகாரிகள், அவர்களாகவே வகுப்பறைக்கு சென்று பார்க்கலாம்.
தரவுகள் தர தடை
அரசு பள்ளி மாணவர்களை, பள்ளிக்கு வெளியே நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவோ அல்லது பார்வையாளர்களாக அழைத்து செல்லவோ கலெக்டர்கள் உத்தரவிடக் கூடாது.
பள்ளி நேரத்தில், பள்ளி வளாகத்தில் நடக்கும் கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக பொது சேவை ஆணைய தேர்வுகள் அல்லது மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்கள் நடத்தும் தேர்வுகள் நடத்தக்கூடாது. இத்தகைய தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட வேண்டுமானாலும், விதிமுறைகள்படி, பொது விடுமுறை நாட்கள் அல்லது கோடை விடுமுறை நாட்களில் மட்டுமே நடத்த அனுமதிக்க வேண்டும்.
இந்த விதியை மீறும் மாவட்ட கலெக்டர்கள், பிளாக் கல்வி அதிகாரிகள், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்
அரசு பள்ளி விபரங்களின் தரவுகளை, தனியார் பள்ளிகளுக்கு வாய்மொழியாகவோ அல்லது எழுத்துபூர்வமாகவோ வழங்க, மாவட்ட கலெக்டர்கள், கல்வி அதிகாரிகள், பள்ளி முதல்வர்கள், துறை அதிகாரிகள், உத்தரவிடக்கூடாது.
இந்த உத்தரவுகளை பின்பற்றாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.