/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலி தாக்கி முதியவர் காயம் சிறுத்தையா என சந்தேகம்
/
புலி தாக்கி முதியவர் காயம் சிறுத்தையா என சந்தேகம்
ADDED : அக் 09, 2025 04:24 AM
மாண்டியா : மாண்டியாவின் கொரவாலே கிராமத்தில் புலி தாக்கியதில், தொழிலாளி காயமடைந்தார்.
மாண்டியா நகரின், கொரவாலே கிராமத்தில் வசிப்பவர் திருமலை, 60. இவர் தோட்டங்கள், வயல்களில் கூலி வேலை செய்கிறார். நேற்று காலை தோட்டம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த புலி, அவர் மீது பாய்ந்து தாக்கியது.
இதில், திருமலையின் தொடை, வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியை சமாளித்து, புலியுடன் போராடினார். தன் கையில் இருந்த கம்பால் தாக்கினார். அதற்குள் இவரது அலறல் கேட்டு, அப்பகுதியினர் கூட்டமாக வந்ததால், புலி ஓடி வனப்பகுதிக்குள் மறைந்தது.
காயமடைந்த திருமலை, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இந்த சம்பவத்தால், கொரவாலே கிராமத்தினர் பீதி அடைந்துள்ளனர்.
இதுவரை சிறுத்தை அச்சுறுத்தல் இருந்தது. இப்போது புலி தென்பட்டுள்ளதால், பதற்றமான சூழ்நிலை உள்ளது. புலியை பிடிக்கும்படி வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால் திருமலையை தாக்கியது, புலியா, சிறுத்தையா என, வனத்துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர். கொரவாலே வனப்பகுதியில் இதுவரை புலி இல்லை. கிராம மக்கள் அச்சத்தில் சிறுத்தையை, புலி என்கின்றனரோ என, அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
எனினும் கவனமாக இருக்கும்படி கிராமத்தினரை வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.